விமான நிலையத்தில் டிரைவிங் லைசென்ஸ்: இலங்கையில் திட்டம் துவக்கம்

கொழும்பு: விமான நிலையத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கு தற்காலிக டிரைவிங் லைசென்ஸ் வழங்கும் திட்டத்தை இலங்கை அரசு துவக்கி உள்ளது.

இது குறித்து இலங்கை போக்குவரத்து துறை தலைமை அதிகாரி கமல் அமரசிங்க கூறியதாவது:

வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளின் வசதிக்காக, விமான நிலையத்தில் ஒரு மாதத்திற்கு செல்லுபடியாகும் டிரைவிங் லைசென்ஸ் வழங்கப்படுகிறது. இந்த தற்காலிக டிரைவிங் லைசென்ஸ் மூலம் சுற்றுலாப்பயணிகள், கனரக வாகனங்கள் மற்றும் மூன்று சக்கரவாகனங்களை இயக்குவதற்கு பயன்படுத்தக்கூடாது.

வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் உரிய நடைமுறையை பின்பற்றி இந்த லைசென்ஸை பெறலாம். இது சுற்றுலாப் பயணிகள் தாங்களாகவே ஓட்டக்கூடிய மிகவும் விரைவான செயல்முறையாகும்.இந்த முன்முயற்சி, சுற்றுலாப் பயணிகள் வாகனம் வாடகைக்கு எடுப்பதை மேலும் எளிதாக்கும் என எதிர்பார்க்கின்றோம்.

இவ்வாறு கமல் அமரசிங்க கூறினார்.

Advertisement