காலிறுதியில் ரிபாகினா

மான்ட்ரியல்: கனடா ஓபன் டென்னிஸ் காலிறுதிக்கு கஜகஸ்தானின் ரிபாகினா முன்னேறினார்.

கனடாவின் மான்ட்ரியலில், பெண்களுக்கான டபிள்யு.டி.ஏ., நேஷனல் பாங்க் ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றில் கஜகஸ்தானின் எலினா ரிபாகினா, உக்ரைனின் டயானா யாஸ்டிரிம்ஸ்கா மோதினர். இரண்டு மணி நேரம், 31 நிமிடம் நீடித்த போட்டியில் அசத்திய ரிபாகினா 5-7, 6-2, 7-5 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தார்.
மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் கோகோ காப், கனடாவின் விக்டோரியா எம்போகோ மோதினர். இதில் ஏமாற்றிய கோகோ காப் 1-6, 4-6 என்ற நேர் செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினார்.

Advertisement