வைகை ஆற்றிற்குள் கொட்டப்படும் குப்பை கழிவுகளால்: நோய் அச்சம்
திருப்புவனம்: திருப்புவனம் வடகரையில் குப்பைகள் சேகரிக்க தூய்மை பணியாளர்கள் வராததால் கிராம மக்கள் குப்பைகள் அனைத்தையும் அருகில் உள்ள தடுப்பணையில் கொட்டி வருகின்றனர்.
திருப்புவனம் அருகே மடப்புரம் ஊராட்சியில் வடகரை கிராமம் உள்ளது. இங்கு 2 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். பெரும்பாலும் கூலி தொழிலாளர்களே அதிகளவில் வசித்து வருகின்றனர். தினசரி இப்பகுதியில் குப்பைகள் சேகரிக்க தூய்மை பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். நான்கு வருடங்களுக்கு முன் ஒருசிலர் வந்து குப்பைகளை சேகரித்தனர். கடந்த நான்கு வருடங்களாக குப்பைகள் சேகரிக்க யாருமே வருவதில்லை. வடகரையில் தொடக்கப்பள்ளி, அங்கன்வாடி மையம், அரசு ஆண்கள் பள்ளிகள் உள்ள நிலையில் குப்பைகளை சேகரிக்க யாருமே வராததால் தினசரி சேகரிக்கப்படும் குப்பைகளை வேறு வழியின்றி அருகில் உள்ள வைகை ஆறு தடுப்பணையில் கொட்டிவிட்டு மாசுபடுத்துகின்றனர்.
இது குறித்து மடப்புரம் மகேஸ்வரன் கூறியதாவது, வடகரைக்கு துாய்மை பணியாளர்களே வருவதில்லை. குப்பைகளை அகற்ற யாரும் வராததால், அவற்றை வைகை ஆற்றிற்குள் கொட்டி மாசு ஏற்படுத்துகின்றனர். அருப்புக்கோட்டை கூட்டு குடிநீர் திட்ட கிணறுகளில் கழிவு நீர் கலந்து விடுவதாக மக்கள் அஞ்சுகின்றனர், என்றார்.
/////
மேலும்
-
'சிறுமி முதல் மூதாட்டி வரை யாருக்கும் பாதுகாப்பில்லை' அன்புமணி குற்றச்சாட்டு
-
ஆன்லைன் டிரேடிங் செயலி; ரூ.50 லட்சம் நஷ்டம் மேலாளர் தற்கொலை
-
அரியலுார் அருகே பாலம் பக்கவாட்டு சுவர் சரிந்து போக்குவரத்து பாதிப்பு
-
வக்கீல் வீட்டில் ரூ.50 லட்சம் 50 சவரன் திருட்டு
-
ராணுவ சரக்கு விமானம் ஒப்படைத்தது 'ஏர்பஸ்'
-
வெடிகுண்டை வைத்து விளையாடிய 5 குழந்தைகள் பலி