காசிமேடில் விற்பனைக்கு வந்த 500 கிலோ ராட்சத சுறா மீன்

காசிமேடு:மீனவர் வலையில் சிக்கிய 500 கிலோ ராட்சத சுறா மீன், நேற்று காசிமேடு துறைமுகத்தில் விற்பனைக்கு வந்தது.
ஆடி மாதம் என்பதால், அம்மன் கோவில்களில் மட்டுமின்றி வீடுகளிலும் கூழ்வார்த்தல் நிகழ்ச்சி நடக்கும். வீடுகளில் அம்மனுக்கு வைக்கப்படும் படையலில், மீன் உணவு பிரதானமாக இருக்கும்.
ஆடி மாதம் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையான நேற்று அதிகாலை முதலே, காசிமேடில் மக்கள் குவிந்தனர். கடலுக்குள் மீன்பிடிக்க சென்ற, 100க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நேற்று கரை திரும்பின.
இதை முன்னிட்டு, நேற்று முன்தினம் நள்ளிரவு 12:00 மணி முதலே, காசிமேடில் வியாபாரிகள் வரத்துவங்கினர். காலை விடிய விடிய மக்கள் கூட்டம் அலைமோதியது.
இந்த நிலையில், காசிமேடு பகுதியைச் சேர்ந்த குமார் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் பிடித்து வரப்பட்ட, 500 கிலோ பால் சுறா மீன் விற்பனைக்கு வந்தது. இதை மீன் வாங்க வந்தோர் பிரமிப்பாக பார்த்தனர்.
இந்த மீன், கிலோ 350 ரூபாய் என, 1.75 லட்சம் ரூபாய்க்கு விற்பனையாகும் என, மீனவர்கள் தெரிவித்தனர்.
மேலும், சிறிய ரக சங்கரா, கானாங்கத்த உள்ளிட்ட மீன் வகைகள் அதிகளவில் விற்பனைக்கு வந்தன.
அதேநேரம் கட்டுக்கடங்காத மக்கள் கூட்டத்தால், விலை சற்று அதிகமாக விற்கப்பட்டது. பொதுமக்கள் ஆர்வ முடன் மீன் வகைகளை பேரம் பேசி வாங்கி சென்றனர்.
மீன் விலை நிலவரம் வகை கிலோ (ரூ.) வஞ்சிரம் 1,300 - 1,400 கறுப்பு வவ்வால் 900 - 1,100 வெள்ளை வவ்வால் 1,300 - 1,400 பாறை 500 - 600 கடல் விரால் 550 - 600 சங்கரா 300 - 500 தும்பிலி 200 - 400 கானாங்கத்த 250 - 300 கடம்பா 300 - 400 கிளிச்சை 100 - 150 நெத்திலி 250 - 300 வாளை 200 - 250 இறால் 450 - 500 டைகர் இறால் 1,000 - 1,300 நண்டு 300 - 400
மேலும்
-
திருச்சியில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்; காவிரியில் ஆயிரக்கணக்கானோர் சிறப்பு வழிபாடு
-
தேனி, தென்காசி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று கனமழை
-
விலை போகாத எலுமிச்சை விரக்தியில் விவசாயிகள்
-
மாதம் ரூ.40,000 சம்பாதிக்கும் கிராமத்து பெண்
-
இயற்கை விவசாய பண்ணையாக பள்ளி வளாகத்தை மாற்றிய பெண்
-
தினக்கூலி டூ தொழில் முனைவோர்