மாதம் ரூ.40,000 சம்பாதிக்கும் கிராமத்து பெண்

இவரது தந்தை ஆட்டோ ஓட்டி சம்பாதிக்கும் வருமானத்தில், குடும்பத்தை நடத்த வேண்டிய சூழல் இருந்தது. குடும்பத்தின் கஷ்டத்தை புரிந்து கொண்ட அஞ்சலி, படிப்பில் முதல் மதிப்பெண்கள் எடுக்க தவறவில்லை.

வேலை இல்லை அவர், நன்றாக படித்தாலும் அவரது கல்லுாரியில், 'கேம்பஸ் இன்டர்வியூ' இல்லை என்பதால், அவருக்கு வேலை கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டது. இது அவருக்கு பெரும் சுமையாக இருந்தது. எப்படியாவது வேலை பெற்று, தன் குடும்பத்துக்கு உதவி செய்ய நினைத்தார். ஆனாலும் கிடைக்கவில்லை.

அப்போது, டிப்ளமோ கல்லுாரியில் ஆசிரியர் வேலைக்கு சேர்ந்தார். இருப்பினும், அந்த வேலையில் கிடைத்த சம்பளம் போதவில்லை. அப்போது, பெங்களூரில் உள்ள 'உன்னட்டி பவுண்டேஷன்' பற்றி அறிந்து கொண்டார். அங்கு சென்று 35 நாட்கள் பயிற்சி பெற்றார். இந்த பயிற்சி பட்டறையில், கிராமப்புறத்தில் இருந்து வரும் மாணவர்களுக்காக சிறப்பு பயிற்சி வழங்கப்படுகிறது. இங்கு அடிப்படை ஆங்கிலம், கணினி பயிற்சி வழங்கப்படுகிறது.

மன உறுதி இங்கு சேர்ந்து சிறப்பாக பயிற்சி பெற்று, பிராட்பிரிட்ஜ் பைனான்ஷியல் சொல்யூஷன் எனும் நிறுவனத்தில் கடந்த ஆண்டு வேலைக்கு சேர்ந்தார். தற்போது, மாதம் 40,000 ரூபாய் மாத சம்பளம் வாங்குகிறார். இதன் மூலம் தன் வீட்டு பிரச்னைகளுக்கு தீர்வுகள் அளித்து வருகிறார்.

கிராமப்புறத்தில் இருந்து வந்தாலும், தன் திறமைகளை வளர்த்து கொண்டு, பெங்களூரு போன்ற நகரத்தில் வாழ்ந்து கொண்டு தன் குடும்ப பிரச்னைகளை தீர்க்க நினைக்கும் அஞ்சலியின் மன உறுதி அசாத்தியமானது.

Advertisement