விலை போகாத எலுமிச்சை விரக்தியில் விவசாயிகள்

சென்னை : எலுமிச்சை பழத்திற்கு உரிய விலை கிடைக்காததால், அவற்றை சாகுபடி செய்து வரும் விவசாயிகள் விரக்தி அடைந்துள்ளனர்.
திண்டுக்கல், தேனி, துாத்துக்குடி, நாமக்கல், திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட பல மாவட்டங்களில் எலுமிச்சை சாகுபடி செய்யப்படுகிறது.
பண்டிகை, திருமணம் உள்ளிட்ட விசேஷ நிகழ்ச்சிகள், கோவில் திரு விழாக்கள், கோடைக் காலங்களில் எலுமிச்சையின் தேவை அதிகரிப்பது வழக்கம். அத்தகைய நேரங்களில் அவற்றின் விலை கூடுதலாக இருக்கும்.
கடந்த மே மாதம், கிலோ எலுமிச்சை பழம், 150 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இதை தொடர்ந்து, படிப்படியாக அதன் விலை குறைந்து வந்தது. ஆடி மாதம் அம்மன் கோவில்களில், திருவிழா, கூழ் வார்த்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன.
தேவை அதிகரித்துள்ள நிலையில் உற்பத்தியும் பெருகி உள்ளது. இதனால், விற்பனைக்கு வரும் எலுமிச்சைக்கு உரிய விலை கிடைக்கவில்லை.
கோயம்பேடு சந்தையில், கிலோ எலுமிச்சை 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லரை விலையில், ஒரு எலுமிச்சை பழம் 15 ரூபாய்க்கு விற்ற நிலையில், தற்போது இரண்டு ரூபாய்க்கு கூட வாங்க ஆளில்லை.
எலுமிச்சைக்கு உரிய விலை கிடைக்காத காரணத்தால், அவற்றை சாகுபடி செய்து வரும் விவசாயிகள் விரக்தி அடைந்துள்ளனர்.
எலுமிச்சை மதிப்பு கூட்டும் ஆலைகள், ஊறுகாய் உற்பத்தி நிறுவனங்கள் வாயிலாக, அவற்றை கொள்முதல் செய்வதற்கு, வேளாண் வணிக பிரிவினர் உதவ வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
மேலும்
-
அதிகாரத்தை பகிர தயக்கம் ; முதல்வர் சித்தராமையாவை மறைமுகமாக சாடிய டிகே சிவகுமார்
-
உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்கு இந்தியா மறைமுக நிதியுதவி; அமெரிக்கா அபாண்டமான குற்றச்சாட்டு
-
மாநில காங்., செயலாளர் பிறந்த நாள் மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு
-
கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் கட்ட எதிர்ப்பு : பா.ம.க., ஆர்ப்பாட்டம்
-
பெரியாயி அம்மன் கோவிலில் ஆடிப்பெருக்கு வழிபாடு
-
வேலை வாய்ப்பு முகாம் : 641 பேருக்கு பணி ஆணை