தேனி, தென்காசி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று கனமழை


சென்னை : 'தமிழகத்தில் கோவை, நீலகிரி தேனி, தென்காசி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


அதன் அறிக்கை:



தமிழகத்தில் நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக புதுக்கோட்டையில் 14 செ.மீ., மழை பெய்துள்ளது.




அதற்கு அடுத்தபடியாக, புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் 12; கோவை மாவட்டம் சின்னக்கல்லாரில் 11; புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல், பெருங்களூர், திருச்சி மாவட்டம் துவாக்குடி, திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஆகிய இடங்களில் தலா 8 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.



தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல், ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. குமரிக்கடலை ஒட்டியுள்ள பகுதிகளின் மேலும், ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.



இதனால், தமிழகத்தில் ஒரு சில இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும். கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதால், 'ஆரஞ்ச் அலெர்ட்' விடுக்கப்பட்டுள்ளது. தேனி, தென்காசி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்.

கோவை, நீலகிரி மாவட்டங்களில் நாளை அதி கனமழை பெய்ய உள்ளதால், அம்மாவட்டங்களுக்கு 'ரெட் அலெர்ட்' விடுக்கப்பட்டுள்ளது. தேனி, தென்காசி மாவட்டங்களில் நாளை மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், ஆரஞ்ச் அலெர்ட்' விடுக்கப்பட்டுள்ளது.

@twitter@https://x.com/dinamalarweb/status/1952169379149627437twitter


கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்துார், வேலுார், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில், ஒரு சில இடங்களில் கனமழை பெய்யலாம்.



சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும்; ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்யலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement