இலுப்பூரில் வீடு புகுந்து 12 சவரன் நகை திருட்டு
திருவாலங்காடு:வீடு புகுந்து 12 சவரன் நகைகள் திருடியோர் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
திருவாலங்காடு ஒன்றியம் இலுப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வேணுகோபால், 55. இவரது மனைவி சாந்தி 50. இவர்கள், வீட்டின் முன் பெட்டிக்கடை வைத்துள்ளனர்.
இருவரும், நேற்று முன்தினம் காலை, ஆந்திர மாநிலம் நகரி பகுதியில் உள்ள கோவிலுக்கு சென்றனர். இரவு வீட்டிற்கு வந்தபோது, திருட்டு நடந்திருப்பது தெரிய வந்தது. உடனே, சாந்தி பீரோவை திறந்து பார்த்துள்ளார். அப்போது, லாக்கரில் வைத்திருந்த 12 சவரன் நகைகள் திருடப்பட்டிருந்தது தெரிய வந்தது.
இது குறித்து கனகம்மாசத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
தம்பதி வீட்டை பூட்டி வெளியே செல்லும்போது, சாவியை ஜன்னல் அருகே வைத்து செல்வது வழக்கம். இதை தெரிந்த நபர்கள் யாராவது திருட்டில் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மேலும்
-
திருச்சியில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்; காவிரியில் ஆயிரக்கணக்கானோர் சிறப்பு வழிபாடு
-
தேனி, தென்காசி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று கனமழை
-
விலை போகாத எலுமிச்சை விரக்தியில் விவசாயிகள்
-
மாதம் ரூ.40,000 சம்பாதிக்கும் கிராமத்து பெண்
-
இயற்கை விவசாய பண்ணையாக பள்ளி வளாகத்தை மாற்றிய பெண்
-
தினக்கூலி டூ தொழில் முனைவோர்