சின்சினாட்டி டென்னிஸ்: கார்சியா வெற்றி

சின்சினாட்டி: சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் முதல் சுற்றில் பிராசின் கார்சியா, கிரீசின் மரியா சக்காரி வெற்றி பெற்றனர்.
அமெரிக்காவில், பெண்களுக்கான டபிள்யு.டி.ஏ., சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் பிரான்சின் கரோலின் கார்சியா, பிரிட்டனின் சோனல் கார்டல் மோதினர். இதில் கார்சியா 5-7, 6-4, 6-4 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.


மற்றொரு முதல் சுற்றில் கிரீசின் மரியா சக்காரி 6-3, 3-6, 6-2 என ரஷ்யாவின் கமிலா ரகிமோவாவை தோற்கடித்தார். செக்குடியரசின் பார்போரா கிரெஜ்சிகோவா 6-4, 4-6, 6-0 என அமெரிக்காவின் அலிசியா பார்க்சை வென்றார்.
மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் டேனியல் கோலின்ஸ் 4-6, 6-7 என சகவீராங்கனை டெய்லர் டவுன்சென்டிடம் தோல்வியடைந்து வெளியேறினார்.

Advertisement