காஷ்மீருக்கு முதல் முறையாக சரக்கு ரயில் சேவை ; பிரதமர் பெருமிதம்

புதுடில்லி: பஞ்சாப்பில் இருந்து காஷ்மீர் பள்ளத்தாக்கிற்கு முதல்முறையாக சரக்கு ரயில் சேவை தொடங்கப்பட்டதற்கு பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
செனாப் நதியின் மீது கட்டப்பட்ட புதிய ரயில் பாலத்தை பிரதமர் மோடி கடந்த ஜூன் மாதம் திறந்து வைத்தார். அதன்பிறகு, முதல்முறையாக, காஷ்மீருக்கு ரயில் சேவை வழங்கப்பட்டது.
இந்த நிலையில், பஞ்சாப்பிலிருந்து காஷ்மீர் பள்ளத்தாக்கில் புதிதாக தொடங்கப்பட்ட அனந்த்நாக் சரக்கு கிடங்கிற்கு முதல் சரக்கு ரயில் இன்று வந்தடைந்தது.
இது குறித்து தனது மகிழ்ச்சியை பகிர்ந்த ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், "இந்தியாவின் பிற சரக்கு ரயில் போக்குவரத்துடன் காஷ்மீர் பள்ளத்தாக்கையும் இணைத்ததில் மகிழ்ச்சியளிக்கிறது. மேலும், காஷ்மீர் பள்ளத்தாக்கில் வாழும் மக்களின் ரயில் போக்குவரத்துச் செலவை குறைக்கும்," என்று எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டிருந்தார்.
அவரது இந்தப் பதிவை பகிர்ந்த பிரதமர் மோடி," ஜம்மு காஷ்மீரின் வர்த்தகம் மற்றும் தொடர்புக்கும் மிகவும் சிறப்பான நாள். இப்பகுதியின் பொருளாதார முன்னேற்றம் மற்றும் மக்களின் வளமான எதிர்காலத்திற்கு வழிவகுக்கும்," எனக் குறிப்பிட்டுள்ளார்.





மேலும்
-
யூடியூபர் வீட்டில் துப்பாக்கிச்சூடு: பஞ்சாபில் பரபரப்பு
-
வங்கதேச தேர்தலில் வன்முறை அபாயம்: முகமது யூனுஸ் கவலை
-
அவரை பற்றி பேசுவது வீண்: மஹூவா மொய்த்ரா குறித்து கல்யாண் பானர்ஜி விமர்சனம்
-
போலி தூதரகத்தை தொடர்ந்து போலி சர்வதேச போலீஸ் ஸ்டேஷன்; உபியில் அடுத்தடுத்து அதிர்ச்சி
-
மின்னணு பொருட்கள் உற்பத்தி 12 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிப்பு; அஸ்வினி வைஷ்ணவ் பெருமிதம்
-
வெளிநாட்டவர்களுக்கு குறி; அமேசான் போலி உதவி மையம் நடத்திய கும்பல் கைது