உலக பள்ளி கைப்பந்து போட்டி தேர்வு
புதுச்சேரி : பள்ளிக்கல்வி துறை சார்பில், நடைபெறவுள்ள கைப்பந்து விளையாட்டு வீரர்களுக்கான தேர்வு வரும் 12ம் தேதி காலை 8 மணிக்கு லாஸ்பேட்டை, பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கில் நடக்கவுள்ளது. இதில் தேர்வாகும் மாணவ, மாணவிகள் வரும் 25 மற்றும் 28 ம் தேதிகளில் புனே, பலேவாடியில் நடக்கும் இரண்டாம் கட்ட வீரர்கள் தேர்வில் பங்கேற்பர்.
பின், இறுதியாக தேர்வாகும் மாணவ, மாணவிகள் வரும் டிச., 4ம் தேதி முதல் 13ம் தேதி வரை சீனா, ஷாங்கலுவோ பகுதியில் நடக்கவுள்ள பள்ளி கைப்பந்து போட்டிக்கு, இந்திய பள்ளி விளையாட்டு கூட்டமைப்பு மூலம் தேர்வு செய்து அனுப்பப்படவுள்ளனர்.
6 முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவர்கள் இதில் பங்கேற்க தகுதியானவர்கள். இதற்கு வயது வரம்பு கடந்த 2010ம் ஆண்டு ஜன., 1ம் தேதி அல்லது அதற்கு பின் பிறந்திருக்க வேண்டும். இது தொடர்பாக மேலும் கூடுதல் விபரங்கள் பெற விரும்புவோர், பள்ளிக்கல்வி துறை இணையதளம் https://schooledn.py.gov.in காணலாம்.
இவ்வாறு புதுச்சேரி அரசின் பள்ளிக்கல்வி இயக்கக செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளனர்.
மேலும்
-
உலக நாடுகள் மீதான வர்த்தக போரால் தன்னையே அழித்துக்கொள்ளும் டிரம்ப்; எச்சரிக்கும் வல்லுநர்கள்
-
சிவகாசி அருகே வீட்டில் சட்ட விரோதமாக பட்டாசுகள் தயாரிப்பு: வெடிவிபத்தில் 3 பேர் பலி
-
ஆப்பரேஷன் சிந்துார்: பாக்., ராணுவத்தின் 6 போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியது இந்திய விமானப்படை!
-
அமெரிக்க வரி விதிப்பின் பின்னணியில் பாக்., ராணுவம்: கார்த்தி சிதம்பரம் சந்தேகம்
-
ராமதாசுக்காக காத்திருக்கும் காலி இருக்கை; அன்புமணி தலைமையில் தொடங்கியது பாமக பொதுக்குழு
-
பாதுகாப்பு தளவாட உற்பத்தியில் புது மைல்கல்: ராஜ்நாத் சிங் உற்சாக தகவல்