தலைநகர் டில்லியை புரட்டி போடும் கனமழை; 100 விமானங்கள் தாமதம், ரெட் அலர்ட் அறிவிப்பு

புதுடில்லி; டில்லியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் 100க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவைகள் பாதிக்கப்பட்டு உள்ளன.
தலைநகர் டில்லியில் கடந்த சில நாட்களாக பலத்த மழை கொட்டி வருகிறது. சாஸ்திரி பவன், ஆர்கே புரம், மோதி பாக், கித்வாய் நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் கொட்டிய மழையால் சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடியது.
சாலைகளில் பல இடங்களில் தண்ணீர் தேங்கியதால் வாகன போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. மழை தொடரும் சூழலில், டில்லி முழுவதும் இன்று(ஆக.09) ரெட் அலர்ட் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
இந் நிலையில் பலத்த மழை காரணமாக வானிலை சீராக இல்லாததால் விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. கிட்டத்தட்ட 105 விமானங்கள் தாமதமாக வருகின்றன. அதில் 13 விமானங்கள் டில்லி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய விமானம் ஆகும்.
எஞ்சிய 92 விமானங்கள் மற்ற நகரங்களில் இருந்து டில்லிக்கு வரவேண்டியவை ஆகும். இதுகுறித்து டில்லி விமான நிலைய அதிகாரிகள் கூறி உள்ளதாவது;
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் முன்னறிவிப்பின்படி, டில்லியில் மோசமான வானிலை நிலவி வருகிறது. இருப்பினும், டில்லி விமான நிலையத்தில் அனைத்து விமான நடவடிக்கைகளும் இயல்பாக இருக்கின்றன.
உங்கள் பயணம் தொந்தரவில்லாமல் இருப்பதை உறுதிசெய்ய எங்கள் குழுக்கள் அனைத்து வழிகளிலும் விடாமுயற்சியுடன் பணியாற்றி வருகின்றன.
இவ்வாறு விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும்
-
உலக நாடுகள் மீதான வர்த்தக போரால் தன்னையே அழித்துக்கொள்ளும் டிரம்ப்; எச்சரிக்கும் வல்லுநர்கள்
-
சிவகாசி அருகே வீட்டில் சட்ட விரோதமாக பட்டாசுகள் தயாரிப்பு: வெடிவிபத்தில் 3 பேர் பலி
-
ஆப்பரேஷன் சிந்துார்: பாக்., ராணுவத்தின் 6 போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியது இந்திய விமானப்படை!
-
அமெரிக்க வரி விதிப்பின் பின்னணியில் பாக்., ராணுவம்: கார்த்தி சிதம்பரம் சந்தேகம்
-
ராமதாசுக்காக காத்திருக்கும் காலி இருக்கை; அன்புமணி தலைமையில் தொடங்கியது பாமக பொதுக்குழு
-
பாதுகாப்பு தளவாட உற்பத்தியில் புது மைல்கல்: ராஜ்நாத் சிங் உற்சாக தகவல்