அமெரிக்க பல்கலையில் துப்பாக்கிச் சூடு: போலீஸ் அதிகாரி, சந்தேக நபர் உயிரிழப்பு

5

வாஷிங்டன்: அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகத்தில் மர்ம நபர் திடீரென நடத்திய துப்பாக்கிச் சூட்டில் போலீஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்தார். துப்பாக்கிச்சூடு நடத்திய நபரும் உயிரிழந்து விட்டார்.


அமெரிக்காவின், அட்லாண்டாவில் உள்ள எமோரி பல்கலைக்கழகம் மற்றும் அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் நுழைவாயிலுக்கு வெளியே திடீரென மர்ம நபர் ஒருவர் பயங்கர துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதில் அந்தப் பல்கலைக்கழகத்தில் உள்ள அறைகளின் ஜன்னல்கள் பலத்த சேதம் அடைந்தது.

இந்த துப்பாக்கிச் சூட்டில் போலீஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்தார். மேலும் தாக்குதல் நடத்திய நபரும் உயிரிழந்து விட்டார். எமோரி பல்கலைக்கழகம் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை, பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மக்கள் யாரும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

"எமோரி பல்கலைக் கழகத்திலிருந்து வெளிவந்த செய்திகளால் நாங்கள் அச்சமடைந்தோம். மேலும் முழு வளாகத்தில் உள்ள மக்களின் பாதுகாப்பிற்காக பிரார்த்தனை செய்கிறோம்" என்று ஜார்ஜியா அட்டர்னி ஜெனரல் கிறிஸ் கார் கூறினார்.

Advertisement