வங்கதேச தேர்தலில் வன்முறை அபாயம்: முகமது யூனுஸ் கவலை

11

டாக்கா: வங்கதேசத்தில் பிப்., மாதம் நடைபெறவுள்ள பொதுதேர்தலில், வன்முறை அபாயம் ஏற்படும் அபாயம் உள்ளது.அனைத்து வாக்குச்சாவடிக்கும் முழுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் கடைப்பிடிக்கபட வேண்டும் என்று இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் கவலை தெரிவித்துள்ளார்.

2026 ஆம் ஆண்டு பிப்ரவரியில் வங்கதேசத்தில் தேர்தல் நடைபெற உள்ளது.

இது தொடர்பாக வங்கதேச அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: பொதுதேர்தல் தொடர்பாக நேற்று உயர்மட்டக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் , இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முஹமது யூனுஸ், தேர்தல் நடத்தும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, அனைத்து வாக்குச் சாவடிகளிலும் முழுமையான பாதுகாப்பை நாம் உறுதி செய்ய வேண்டும் என்றும், நாட்டின் தேர்தல் வரலாற்றில் சுதந்திரமான, நியாயமான மற்றும் அமைதியான தேர்தல் நடைமுறைக்கு இது அவசியம் என்பது குறித்து முகமது யூனுஸ் வலியுறுத்தினார்.

அதேவேளையில், அரசியல் பதட்டங்கள் மற்றும் தேர்தல் நேரத்தில் வன்முறை ஏற்படும் அபாயங்கள் குறித்து கவலை தெரிவித்தார். இவ்வாறு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement