மின்னணு பொருட்கள் உற்பத்தி 12 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிப்பு; அஸ்வினி வைஷ்ணவ் பெருமிதம்

பெங்களூரு: அமெரிக்காவிற்கு ஸ்மார்ட்போன்களை வழங்கும் முன்னணி நாடாக இந்தியா மாறியுள்ளது என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்து உள்ளார்.
பெங்களூருவில் இன்று நடைபெற்ற மெட்ரோ ரயில் திட்டங்களின் தொடக்க விழாவில், அஸ்வினி வைஷ்ணவ் பேசியதாவது: அமெரிக்காவிற்கு ஸ்மார்ட்போன்களை வழங்கும் முன்னணி நாடாக இந்தியா மாறியுள்ளது. மின்னணு உற்பத்தி இப்போது ரூ.12 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.
கடந்த 11 ஆண்டுகளில் இந்தியாவின் மின்னணு உற்பத்தி ஆறு மடங்கு வளர்ந்துள்ளது. மின்னணு ஏற்றுமதி 8 மடங்கு அதிகரித்துள்ளது. இந்தியா உலகின் இரண்டாவது பெரிய மொபைல் போன் உற்பத்தியாளராக மாறியுள்ளது. இந்த வளர்ச்சி, தொழில்நுட்ப உற்பத்திக்கான உலகளாவிய மையமாக மாறுதல், மேம்பட்ட மின்னணு சாதனங்களை இன்னும் பரவலாகக் கிடைக்கச் செய்தல் உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்தப்படுகிறது.
பதினொரு ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியா மின்னணு பொருட்களை ஏற்றுமதி செய்யும் என்று யாரும் கற்பனை செய்து பார்த்திருக்க முடியாது.இந்தியாவின் செமிகண்டக்டர் தொழிற்துறையை கட்டியெழுப்ப வேண்டும் என்ற நீண்டகால கனவு 60 ஆண்டுகளுக்குப் பிறகு நனவாகி உள்ளது. இன்று, நாட்டில் ஆறு செமிகண்டக்டர் ஆலைகள் கட்டுமானத்தில் உள்ளன, மிக விரைவில் இந்த தொழிற் சாலைகளில் இருந்து முதல் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சிப் வெளிவருவதைக் காண்போம். இவ்வாறு அவர் பேசினார்.







மேலும்
-
ரயிலில் அடிபட்டு வாலிபர் பலி
-
சிதம்பரம் சப் கலெக்டர் அலுவலகத்தில் வி.ஏ.ஓ.,க்கள் தர்ணா போராட்டம்
-
சிறுமியிடம் அத்துமீறல் இருவருக்கு வலை
-
ஆவடி மாநகராட்சியை கண்டித்து 22ல் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
-
சுங்கச்சாவடியில் பா.ம.க., வினர் போராட்டம்
-
ரூ.4 கோடியில் படித்துறை சீரமைக்கும் பணி கனமழையால் தற்காலிகமாக நிறுத்தம்