வெளிநாட்டவர்களுக்கு குறி; அமேசான் போலி உதவி மையம் நடத்திய கும்பல் கைது

நாசிக்: வெளிநாடுகளைச் சேர்ந்த குடிமக்களை குறிவைத்து, மஹாராஷ்டிராவில் அமேசான் போலி உதவி மையம் நடத்திய வந்த கும்பலை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.

இது தொடர்பாக சிபிஐ அதிகாரிகளின் எப்ஐஆரில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது; அமேசான் வாடிக்கையாளர் சேவை முகவர்களாகக் காட்டிக் கொண்டு வெளிநாட்டு குடிமக்களை ஏமாற்ற சதி செய்து வந்துள்ளனர். ஏமாற்று அழைப்புகள் மூலம் அவர்களை கிப்ட் கார்டுகள் அல்லது கிரிப்டோகரன்சி அனுப்ப வைத்துள்ளனர்.

மஹாராஷ்டிராவின் நாசிக் மையமாக வைத்து அலுவலகத்தை நடத்தி வந்துள்ளனர். அங்கு பல்வேறு பொறுப்புகளில் சுமார் 60க்கும் மேற்பட்டோர் வேலை செய்து வந்துள்ளனர்.

அங்கு நடத்தப்பட்ட சோதனையில் 44 லேப்டாப்கள், 71 செல்போன்கள், ரூ.1.20 கோடி ரொக்கம், ரூ.1 கோடி மதிப்பிலான சொகுசுகள் கார்கள், 500 கிராம் தங்கம் மற்றும் சுமார் ரூ.6.25 லட்சம் வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

விஷால் யாதவ், ஷெபாஷ், துர்கேஷ், அபய் ராஜ், சமீர் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது, என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement