டிரம்ப் - புடின் பேச்சுவார்த்தையில் பங்கேற்க உக்ரைன் அதிபருக்கும் அழைப்பா? வெள்ளை மாளிகை பரிசீலனை

வாஷிங்டன்: வரும் 15ம் தேதி அமெரிக்கா - ரஷ்யா அதிபர்கள் நடத்தும் பேச்சுவார்த்தையில் பங்கேற்க உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கும் அழைப்பு விடுப்பது தொடர்பாக வெள்ளை மாளிகை பரிசீலனை செய்து வருகிறது என தகவல் வெளியாகி உள்ளது.
மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. இதனை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆர்வம் காட்டி வருகிறார். ஆனால், அவரின் முயற்சியை ரஷ்ய அதிபர் புடின் கண்டுகொள்ளவில்லை. இதனையடுத்து போரை நிறுத்த டிரம்ப் கெடு விதித்தார். பொருளாதார தடை விதிக்கப்படும் என கெடு விதித்தார். இதையடுத்து, ரஷ்ய அதிபர் புடினை, டிரம்ப்பின் சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காப் சந்தித்தார்.
இதனைத் தொடர்ந்து அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் டிரம்ப் - புடின் வரும் 15ம் தேதி சந்தித்து பேச்சு நடத்த உள்ளனர். அப்போது போர்நிறுத்தம் முக்கிய பேசு பொருளாக இருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.உக்ரைன் தரப்பில் முத்தரப்பு பேச்சு நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. அதனை ரஷ்யா ஏற்கவில்லை. ஆனால் இந்த விஷயத்தில் உக்ரைன் இல்லாமல் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதற்கு ஐரோப்பிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து இருந்தன.
இந்த நிலையில், டிரம்ப் - புடின் இடையிலான பேச்சுவார்த்தையில் பங்கேற்க உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு அழைப்பு விடுப்பது குறித்து வெள்ளை மாளிகை பரிசீலனை செய்து வருவதாக, அமெரிக்கா ஊடகம் தெரிவித்துள்ளது. ஆனால், இந்த அழைப்பை ஏற்று பேச்சுவார்த்தையில் ஜெலன்ஸ்கி பங்கேற்பாரா என்பதில் தெளிவாக தெரியவில்லை எனவும் கூறியுள்ளது.




மேலும்
-
யூடியூபர் வீட்டில் துப்பாக்கிச்சூடு: பஞ்சாபில் பரபரப்பு
-
வங்கதேச தேர்தலில் வன்முறை அபாயம்: முகமது யூனுஸ் கவலை
-
அவரை பற்றி பேசுவது வீண்: மஹூவா மொய்த்ரா குறித்து கல்யாண் பானர்ஜி விமர்சனம்
-
போலி தூதரகத்தை தொடர்ந்து போலி சர்வதேச போலீஸ் ஸ்டேஷன்; உபியில் அடுத்தடுத்து அதிர்ச்சி
-
மின்னணு பொருட்கள் உற்பத்தி 12 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிப்பு; அஸ்வினி வைஷ்ணவ் பெருமிதம்
-
வெளிநாட்டவர்களுக்கு குறி; அமேசான் போலி உதவி மையம் நடத்திய கும்பல் கைது