கால்நடை வளர்ப்பு பயிற்சி

திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்ட் எதிரிலுள்ள கால்நடை பல்கலை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நேற்று கறவை மாடு வளர்ப்பு தொடர்பான பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. நாளை, (14ம் தேதி) வெள்ளாடு மற்றும் செம்மறியாடு வளர்ப்பு என்ற தலைப்பிலும், வரும், 21ம் தேதி, நாட்டுக்கோழி வளர்ப்பு, வரும், 28ம் தேதி ஜப்பானிய காடை வளர்ப்பு என்ற தலைப்பிலும் பயிற்சி வழங்கப்பட இருக்கிறது.

விருப்பமுள்ள விவசாயிகள் பங்கேற்று பயன்பெறலாம். கூடுதல் விவரங்களுக்கு, காலை, 10:00 முதல், மாலை, 5:00 மணி வரை, 0421-2248524 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, பல்கலை ஆராய்ச்சி மைய தலைவர் மதிவாணன் தெரிவித்துள்ளார்.

Advertisement