விடுமுறை நாளில் நிகழ்ச்சி; கோவில் நிர்வாகம் அழைப்பு
திருப்பூர்; கோவில் விழா மேடையில், விடுமுறை நாட்களில், ஆன்மிகம் சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்திக்கொள்ளலாம் என, விஸ்வேஸ்வர சுவாமி கோவில் நிர்வாகம் அழைப்புவிடுத்துள்ளது.
திருப்பூர் விஸ்வேஸ்வர சுவாமி, வீரராகவப்பெருமாள் கோவில்களில், மாதந்தோறும் பல்வேறு வகையான ஆன்மிக வழிபாடு மற்றும் நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. நவராத்திரி விழா, கோவில் தேர்த்திருவிழா நாட்களில், விஸ்வேஸ்வரர் கோவில் விழா மேடையில், கலை நிகழ்ச்சி, ஆன்மிக சொற்பொழிவு, பஜனை நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.
இந்நிலையில், அறங்காவலர் குழு முடிவுப்படி, கோவில் விழா மேடையில், விடுமுறை நாட்களில் இலவசமாக ஆன்மிக நிகழ்ச்சிகள் நடத்தலாம் என அறிவித்துள்ளது. கோவில் விழாக்கள், பிரதோஷ வழிபாடு நாட்கள் நீங்கலாக, மற்ற விடுமுறை நாட்களில் விழா நடத்திக்கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து அறங்காவலர் குழு தலைவர் சுப்பிரமணியம் கூறுகையில், ''விஸ்வேஸ்வர சுவாமி கோவில் விழாமேடை நிகழ்ச்சிகளை, பக்தர்கள் அமர்ந்து பார்க்கும் வசதியுடன் உள்ளது. சனி, ஞாயிறு போன்ற நாட்களில், ஆன்மிகம் சார்ந்த நிகழ்ச்சிகள் நடத்த இலவசமாக பயன்படுத்தி கொள்ளலாம். ஆன்மிக பாடல், முற்றோதல், பரதநாட்டியம், ஆன்மிக நாட்டிய நாடகம், சொற்பொழிவு, இன்னிசை என, பல்வேறு ஆன்மிகம் சார்ந்த நிகழ்ச்சி மட்டுமே நடத்த வேண்டும். விவரங்களுக்கு, கோவில் செயல் அலுவலர் அலுவலகத்தை தொடர்புகொள்ளலாம்,'' என்றார்.
மேலும்
-
வக்கீல்கள் சம்பளம் உயர்கிறது: கேரளா அரசு அறிவிப்பு
-
'முட்டாள்தனமாக பேச வேண்டாம்': பாக்., பிரதமருக்கு ஓவைஸி அறிவுரை
-
ராகுலுடன் சந்திரபாபு நாயுடு ரகசிய கூட்டணி; ஜெகன்மோகன் புதுகுண்டு
-
கேலி செய்யப்பட்ட பீகார் பெண் விவகாரத்தில் காங்கிரஸ் மன்னிப்பு கேட்குமா: மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ கேள்வி
-
நெல்லை ஆணவக் கொலை வழக்கு: சுர்ஜித்தின் சகோதரர் கைது
-
அமைச்சர்களுடன் தூய்மைப்பணியாளர்கள் நடத்திய பேச்சு தோல்வி