உங்களுடன் ஸ்டாலின் முகாம் கூட்டத்தால் அலுவலர்கள் திணறல்

திருப்பூர்; திருப்பூர் மாநகராட்சியில் 44, 45 மற்றும் 50 ஆகிய வார்டுகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் முகாம் காயத்ரி மஹாலில் நடைபெற்றது.

மேயர் தினேஷ்குமார், எம்.எல்.ஏ., செல்வராஜ் துவக்கி வைத்தனர். மகளிர் உரிமைத்தொகை, வீட்டு மனைப்பட்டா, அடுக்கு மாடிக்குடியிருப்பில் வீடு ஆகியன குறித்து 5 ஆயிரம் பேர் மனு அளித்தனர்.

முகாம் அறிவிக்கப்பட்ட, 3 வார்டுகளை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் தற்போது வேறு பகுதிகளுக்கு குடியேறி விட்டனர். இருப்பினும், அவர்கள் வாக்காளர் அட்டை, ஆதார் போன்ற அடையாள அட்டைகள் இதே வார்டு பகுதியில் தான் இடம் பெற்றுள்ளன.

இதனால், வேறுபகுதிகளிலிருந்தும் அதிகளவிலான விண்ணப்பதாரர்கள் முகாமில் பங்கேற்றனர். விண்ணப்பிக்க டோக்கன் பெற கூட்டம் முண்டியடித்த நிலையில், தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனால், அதிகாரிகள் திணறினர்.

Advertisement