உலக விளையாட்டு செய்திகள்

காலிறுதியில் பிரேசில்
இந்தோனேஷியாவில் நடக்கும் பெண்களுக்கான (21 வயது) உலக வாலிபால் சாம்பியன்ஷிப் 'ரவுண்டு-16' போட்டியில் பிரேசில் அணி 3-0 என தென் கொரியாவை வீழ்த்தியது. மற்றொரு போட்டியில் அர்ஜென்டினா 3-0 என செக்குடியரசை வென்றது.


ஆஸ்திரேலியா அசத்தல்
சவுதி அரேபியாவில் நடக்கும் ஆசிய கோப்பை கூடைப்பந்து காலிறுதியில் ஆஸ்திரேலியா, பிலிப்பைன்ஸ் அணிகள் மோதின. துவக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்திய ஆஸ்திரேலியா 84-60 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.


அரையிறுதியில் ஜெர்மனி
ஜெர்மனியில் நடக்கும் 'யூரோ' ஹாக்கி சாம்பியன்ஷிப் லீக் போட்டியில் ஜெர்மனி அணி 10-0 என்ற கோல் கணக்கில் போலந்தை வீழ்த்தியது. மூன்று போட்டியில் 2 வெற்றி, ஒரு 'டிரா' என 7 புள்ளிகளுடன் ஜெர்மனி அணி அரையிறுதிக்குள் நுழைந்தது.


இத்தாலி கலக்கல்
ஜார்ஜியாவில் நடக்கும் 'யூரோ' கூடைப்பந்து (16 வயது) காலிறுதியில் பிரான்ஸ், இத்தாலி அணிகள் மோதின. அபாரமாக ஆடிய இத்தாலி அணி 76-73 (23-28, 16-13, 17-20, 20-12) என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.


எக்ஸ்டிராஸ்

* துலீப் டிராபி கிரிக்கெட் தொடருக்கான (ஆக. 28 - செப். 15) மேற்கு மண்டல அணியின் தலைமை பயிற்சியாளராக கிரண் பவார், துணை பயிற்சியாளராக பல்லவ் வோரா நியமிக்கப்பட்டனர்.

* துாரந்த் கோப்பை கால்பந்து தொடரின் காலிறுதியில் (ஆக. 16-17) ஷில்லாங் லஜோங் - இந்திய கடற்படை, வடகிழக்கு யுனைடெட் - போடோலாந்து, ஜாம்ஷெட்பூர் - டயமண்ட் ஹார்பர், ஈஸ்ட் பெங்கால் - மோகன் பகான் அணிகள் விளையாடுகின்றன.

* அமெரிக்காவில் நடக்கும் சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி, நியூசிலாந்தின் மைக்கேல் வீனஸ் ஜோடி 6-3, 6-7, 4-10 என்ற கணக்கில் போர்ச்சுகலின் பிரான்சிஸ்கோ காப்ரல், ஆஸ்திரியாவின் லுாகாஸ் மிட்லர் ஜோடியிடம் தோல்வியடைந்தது.

* இந்திய கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளராக கலித் ஜமில், இரண்டு ஆண்டுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார். நேஷன்ஸ் கோப்பை தொடருக்கு தயாராகும் விதமாக நாளை பெங்களூருவில் துவங்கும் பயிற்சி முகாமில் பங்கேற்க உள்ளார்.

Advertisement