வீட்டை சேதப்படுத்திய நால்வர் மீது வழக்கு



ஈரோடு, ஈரோடு அடுத்த ஈஞ்சம்பள்ளி சரவணபுரத்தை சேர்ந்த சொக்கலிங்கம் மனைவி பாவாத்தாள், 59. மலையம்பாளையம் போலீசில் அளித்த புகாரில், 'தங்கள் வீட்டின் அருகே தோட்டத்தில் உள்ள பாறையை உரிமையாளர் ராமசாமி, 62, அவரது மகன் சேகர், 38, தொழிலாளர்கள் மணிகண்டன், 40, சீனிவாசன், 42, ஆகியோர் வெடி வைத்து தகர்த்தனர்.


இதில் பாறை பெயர்ந்து என் வீட்டின் மீது வந்து விழுந்தது. இதில் வீடு சேதமானது. எனவே, நான்கு பேர் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும்' என்று கூறியுள்ளார். புகாரை விசாரித்த போலீசார், நால்வர் மீதும் வெடிமருந்து பயன்பாடு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

Advertisement