65 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்; இதுவரை எந்த கட்சியும் ஆட்சேபிக்கவில்லை: தேர்தல் ஆணையம்

புதுடில்லி: பீஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த விவகாரத்தில் இதுவரையில் எந்த அரசியல் கட்சிகளும் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
பீஹார் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தத்தின் மூலம் சுமார் 65 லட்சம் சட்டவிரோத வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அதேவேளையில், நீக்கப்பட்ட வாக்காளர்களின் பெயர் விபரங்களை வெளியிட தேர்தல் ஆணையம் விரும்பாத நிலையில், உச்சநீதிமன்றம் பட்டியலை வெளியிட ஆணை பிறப்பித்துள்ளது.
இதனிடையே, கடந்த ஆக.,1ம் தேதி முதல் பீஹார் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தத்தில் வாக்காளர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் முறையாக தெரிவித்துள்ள ஆட்சேபனைகள் மற்றும் உரிமை கோரல்கள் குறித்த விபரங்களை தேர்ல் ஆணையம் தினமும் வெளியிட்டு வருகிறது.
அதன்படி, தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்ட அறிக்கையின்படி, வரைவு பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு, ஆக.,1ம் தேதி முதல் இன்றைய (ஆக.,15) தினம் வரையில் 28,370 உரிமை கோரல்கள் மற்றும் ஆட்சேபனைகள் நேரடியாக வாக்காளர்களால் தாக்கல் செய்யப்பட்டன. கூடுதலாக, 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட புதிய வாக்காளர்களால் ஒரு லட்சத்து 03 ஆயிரத்து 703 படிவங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.
ஆனால், பாஜ, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட எந்த கட்சிகளிடம் இருந்தும் எந்தவித உரிமை கோரல்களோ, ஆட்சேபனைகளோ வரவில்லை என்று தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.









மேலும்
-
நெல்லை பாலுவிற்கு சிறந்த சமூக சேவகருக்கான விருது
-
உழைக்கும் மக்களுக்கு துணை நிற்போம்: முதல்வர் ஸ்டாலின்
-
வெளிநாடுகளில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்; புகைப்பட ஆல்பம் இதோ!
-
நடுவானில் ஏர் ஏசியா விமானத்தில் கோளாறு; அவசரமாக சென்னையில் தரையிறக்கம்
-
இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயார்; சீனா விருப்பம்
-
ஜம்மு காஷ்மீரில் மேகவெடிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 60 ஆக அதிகரிப்பு; 200 பேர் மாயம்