பெங்களூருவில் வீட்டில் கேட்ட பலத்த வெடிச்சத்தம்: 8 வயது சிறுவன் பலி, நேரில் சென்ற சித்தராமையா

பெங்களூரு; பெங்களூரு அருகே கேஸ் சிலிண்டர் வெடித்துச் சிதறியதில் 8 வயது சிறுவள் ஒருவன் பலியானான். 12க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். சம்பவ பகுதிக்கு முதல்வர் சித்தராமையா நேரில் சென்று நிலைமையை பார்வையிட்டார்.
இதுபற்றிய விவரம் வருமாறு;
வில்சன் கார்டன் பகுதியில் சின்னயன்பாளையத்தில் உள்ள வீடு ஒன்றில் இன்று திடீரென குண்டுவெடிப்பது போன்ற பயங்கர சத்தம் கேட்டது. இதில் முபாரக் (8) என்ற சிறுவன் பலியானான். 12க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
வீட்டின் முதல் தளம், கூரை மற்றும் சுவர்கள் முற்றிலும் இடிந்து சாம்பலாயின. சுற்றியுள்ள சில வீடுகளுக்கு தீ பரவியது. தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் சம்பவ பகுதிக்கு விரைந்து சென்றனர். பலியானவரின் சடலத்தை மீட்ட அவர்கள், காயம் அடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவம் நிகழ்ந்த பகுதிக்கு முதல்வர் சித்தராமையா நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது;
இது ஒரு கேஸ் சிலிண்டர் வெடித்த விபத்தாக இருக்கலாம் என்று சந்தேகம் உள்ளது. சம்பவம் நிகழ்ந்த பகுதியில் உள்ள கட்டட வளாகத்தில் பல வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. அவற்றை சரிசெய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளது. முபாரக் என்ற 8 வயது சிறுவன் உயிரிழந்துள்ளான்.
அவரது குடும்பத்திற்கு இழப்பீடாக ரூ.8 லட்சம் அறிவிக்கப்பட்டு உள்ளது. காயம் அடைந்தவர்களுக்கான உரிய சிகிக்சை செலவை அரசு ஏற்கும். சம்பவத்திற்கான சரியான காரணம் தெரியவில்லை. தொடக்க விசாரணையில் இது சிலிண்டர் வெடிப்பு போல் தெரிகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.


மேலும்
-
டிரம்ப்-புடின் சந்திப்பில் எந்த ஒப்பந்தமும் கையெழுத்தாகாது: ரஷ்யா திடீர் அறிவிப்பு
-
நாகாலாந்து கவர்னர் இல.கணேசன் காலமானார்
-
குவைத்தில் கள்ளச்சாராயத்தால் விபரீதம்: 51 பேருக்கு டயாலிசிஸ், 21 பேருக்கு பார்வையிழப்பு
-
நாட்டிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழகமே: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
-
ஹூமாயூன் கல்லறையில் தர்ஹா மேற்கூரை சரிந்து 5 பேர் உயிரிழப்பு
-
ஐகோர்ட்டை விட சுப்ரீம் கோர்ட் மேலானது அல்ல: தலைமை நீதிபதி கவாய்