ஹூமாயூன் கல்லறையில் தர்ஹா மேற்கூரை சரிந்து 5 பேர் உயிரிழப்பு

புதுடில்லி: டில்லியில் முகாலயப் பேரரசர் ஹூமாயூனின் கல்லறையில் அமைந்துள்ள தர்ஹா ஒன்றின் மேற்கூரை சரிந்து விழுந்ததில் 5 பேர் உயிரிழந்தனர்.
டில்லியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. சாலைகளில் தண்ணீர் சேர்ந்து சூழ்ந்து காணப்படுவதால் போக்குவரத்துக்கு லாயக்கற்றதாக மாறிவிட்டது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய தலமாக அறிவிக்கப்பட்ட ஹூமாயூன் கல்லறையில் ஷரீப் பதே ஷா தர்ஹா உள்ளது. இதன்மேற்கூரை இன்று மாலை சரிந்து விழுந்தது. 15 முதல் 20 பேர் சிக்கிக் கொண்டனர் அவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். அதில், 5 பேர் உயிரிழந்துள்ளனர். மற்றவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
பாபரின் மகனான ஹூமாயூன் 1556 ல் காலமானார். இதன் பிறகு, 1558ம் ஆண்டில், இவரது நினைவாக அவர் மனைவி பேகா பேகம் இந்த கல்லறையை கட்டினார். பாரசீக கட்டட கலைஞர்கள் இந்த கல்லறையை வடிவமைத்தனர்.





மேலும்
-
டிரம்ப்-புடின் சந்திப்பில் எந்த ஒப்பந்தமும் கையெழுத்தாகாது: ரஷ்யா திடீர் அறிவிப்பு
-
நாகாலாந்து கவர்னர் இல.கணேசன் காலமானார்
-
குவைத்தில் கள்ளச்சாராயத்தால் விபரீதம்: 51 பேருக்கு டயாலிசிஸ், 21 பேருக்கு பார்வையிழப்பு
-
நாட்டிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழகமே: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
-
ஐகோர்ட்டை விட சுப்ரீம் கோர்ட் மேலானது அல்ல: தலைமை நீதிபதி கவாய்
-
டிசம்பரில் இந்தியா வருகிறார் அர்ஜென்டினா நட்சத்திர வீரர் மெஸ்ஸி: பிரதமர் மோடியையும் சந்திக்கிறார்