நாட்டிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழகமே: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

9

சென்னை: நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழகமே என்று முதல்வர் ஸ்டாலின் பெருமிதத்துடன் கூறி உள்ளார்.



பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றில் அமைச்சர் கீதாஜீவன் கட்டுரை ஓன்றை எழுதி உள்ளார். அதில் நாட்டிலேயே பெண்கள் பாதுகாப்பு பற்றியும், தமிழகத்தில் அவர்களுக்கான பாதுகாப்பு என்பது எப்படி இருக்கிறது என்றும் குறிப்பிட்டு இருந்தார்.


அந்த கட்டுரையை மேற்கோள் காட்டி முதல்வர் ஸ்டாலின் தமது சமூக வலைதள பக்கத்தில் கூறி உள்ளதாவது:


கல்வியில் பெண்கள் சிறந்து விளங்குவதும், அதிகம் பேர் வேலைவாய்ப்புடன் இருப்பதும் தமிழகம் தான். நாட்டிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாகவும் தமிழகம் இருக்கிறது என்பதை அவர் (அமைச்சர் கீதா ஜீவன்) அந்த கட்டுரையில் எடுத்துக்காட்டி உள்ளார்.


குற்றங்கள் மீது விரைவான, கடுமையான, பாரபட்சமற்ற நடவடிக்கை, குற்ற விகிதங்கள் குறைவது போன்றவை பெண்களை பாதுகாப்பாக வைத்திருக்கின்றன.


விடியல் பயணம், மகளிர் உரிமைத் தொகை, புதுமைப்பெண் போன்ற திட்டங்கள் மூலம் மகளிருக்கு அதிகாரமளிப்பதை கட்டுரையின் மூலம் சுதந்திர தினத்தில் தெரிந்து கொள்ள வேண்டும்.


இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டு உள்ளார்.

Advertisement