சத்தீஸ்கரில் சோகம்; கார்-லாரி மோதிய விபத்தில் 6 பேர் பலி; ஒருவர் படுகாயம்

3


ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் கார் எதிரே வந்த லாரி மீது மோதி ஏற்பட்ட விபத்தில் ஆறு பேர் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்தார்.


சத்தீஸ்கரின் ராஜ்நந்த்கான் மாவட்டத்தில் கார் எதிரே வந்த லாரி மீது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து மோதி விபத்துக்குள்ளானது. ஏழு பேர் கொண்ட நண்பர்கள் குழு ஒன்று உஜ்ஜயினியில் உள்ள மகாகாலேஷ்வர் கோவிலுக்குச் சென்றுவிட்டு பூரியில் உள்ள ஜெகந்நாதர் கோவிலுக்கு காரில் சென்று கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டது.


கார் டிரைவர் தூங்கிவிட்டதால், கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகப்படுகின்றனர்.

இந்த விபத்தில் காரில் பயணித்த ஏழு பேரில், 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கார் டிரைவர் பலத்த காயம் அடைந்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து இன்று அதிகாலை நேரத்தில் நிகழ்ந்துள்ளது.


நள்ளிரவு நேரம், அதிகாலையில் வாகன பயணத்தை தவிர்ப்பது நல்லது. வாகனம் ஓட்டுபவர், தூக்க கலக்கத்தில் சற்று அசந்தாலும் பெரும் விபத்தில் சிக்க வாய்ப்புள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த விபத்து அதிகாலை நேரத்தில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது.

Advertisement