மெரினாவில் திருட்டு: மூன்று பேர் கைது

சென்னை,மெரினாவில் நிறுத்தி யிருந்த கார் கண்ணாடியை உடைத்து, கைவரிசை காட்டிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
வேளச்சேரியை சேர்ந்தவர் வினோத். கடந்த, 9ம் தேதி இரவு நண்பருடன் காரில் மெரினா கடற்கரைக்கு சென்றார். கண்ணகி சிலை பின்புறம், சர்வீஸ் சாலையில் காரை நிறுத்திவிட்டு மணற்பரப்பிற்கு சென்றார். பொழுதுபோக்கிவிட்டு, மீண்டும் காரை எடுக்க சென்றார்.
அப்போது, காரின் பின்பக்க கண்ணாடியை உடைத்து மடிக்கணினி, ஆதார் கார்டு, பான் கார்டு உள்ளிட்ட ஆவணங்கள் அடங்கிய பையை, மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
மெரினா போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். கார் கண்ணாடியை உடைத்து கைவரிசை காட்டிய, திருவல்லிக்கேணியைச் சேர்ந்த பார்த்திபன், 29, ராயப்பேட்டையைச் சேர்ந்த தனுஷ், 21, செல்வா, 24, ஆகிய மூவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, மடிக்கணினியை பறிமுதல் செய்தனர்.
கடந்த 13ம் தேதி மெரினா கடற்கரையில் உறங்கிக் கொண்டிருந்த நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி அன்பரசு, 46 என்பவரிடம், 1,800 ரூபாயையும், இவர்கள் பறித்துச் சென்றதும் தெரிய வந்தது.
மேலும்
-
ராமதாஸ் - அன்புமணி தைலாபுரத்தில் திடீர் சந்திப்பு
-
சுதந்திர தினத்தில் கருப்பு சட்டை சர்ச்சை: ஹெச்.எம்., மீது போலீசில் புகார்
-
திருப்பதிக்கு 7 டன் காய்கறிகள் அனுப்பிய கோலார் பக்தர்கள்
-
பியூட்டி பார்லர்களில் சோதனை பெலகாவியில் விதிமீறல் அம்பலம்
-
டி.டி.ஆர்., ஆவண மோசடி வழக்கில் ரூ.4.06 கோடி மதிப்பு சொத்து முடக்கம்
-
கடந்த 35 ஆண்டுகளில் குறைந்தபட்ச வெப்பநிலை