ஜாம், பழச்சாறு தயாரிப்பு பயிற்சி

சென்னை, ஆக. 16-

தமிழ்நாடு வேளாண் பல்கலை தகவல் மற்றும் பயிற்சி மையத்தில், வரும் 21ல், ஜாம் மற்றும் ஸ்க்வாஷ் தயாரிப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

கிண்டி திரு.வி.க., தொழிற்பேட்டை, சிப்காட் கல்லுாரி எதிரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை தகவல் மற்றும் பயிற்சி மையத்தில், வரும் 21ம் தேதி, ஜாம் மற்றும் பதப்படுத்தப்பட்ட பழச்சாறு தயாரிப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இதில், மிக்ஸ்டு ஜாம், மேங்கோ ஜாம், கேரட் ஜாம், பீட்ரூட் ஜாம், பதப்படுத்தப்பட்ட திராட்சை, மேங்கோ, எலுமிச்சை பழச்சாறு தயாரிப்பு, ரோஸ் சிரப், நன்னாரி சிரப் ஆகியவற்றை தயாரிக்க பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

மேலும் தகவல்களுக்கு, 044 - 2953 0048 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

Advertisement