சபலென்கா அதிர்ச்சி தோல்வி: சின்சினாட்டி ஓபன் காலிறுதியில்

சின்சினாட்டி: சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் காலிறுதியில் பெலாரசின் சபலென்கா, அமெரிக்காவின் கோகோ காப் அதிர்ச்சி தோல்வியடைந்தனர்.
அமெரிக்காவில், பெண்களுக்கான டபிள்யு.டி.ஏ., சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் நடந்தது. ஒற்றையர் பிரிவு காலிறுதியில் உலகின் 'நம்பர்-1' பெலாரசின் அரினா சபலென்கா, 10வது இடத்தில் உள்ள கஜகஸ்தானின் எலினா ரிபாகினா மோதினர். இதில் ஏமாற்றிய சபலென்கா 1-6, 4-6 என்ற நேர் செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினார்.
மற்றொரு காலிறுதியில் அமெரிக்காவின் கோகோ காப் 6-2, 4-6, 3-6 என இத்தாலியின் ஜாஸ்மின் பாவோலினியிடம் தோல்வியடைந்து வெளியேறினார்.
மற்றொரு போட்டியில் போலந்தின் இகா ஸ்வியாடெக் 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் ரஷ்யாவின் அனா கலின்ஸ்கயாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். ரஷ்யாவின் வெரோனிகா குடர்மெடோவா 6-1, 6-2 என பிரான்சின் வார்வரா கிராசேவாவை தோற்கடித்து அரையிறுதிக்குள் நுழைந்தார்.