உக்ரைனுக்கு பாதுகாப்பு உத்தரவாதம்: புடின் ஒப்புக் கொண்டதாக டிரம்ப் தூதர் தகவல்

7


வாஷிங்டன்: அலாஸ்காவில் நடந்த உச்சிமாநாட்டின் போது, உக்ரைனுக்கு பாதுகாப்பு உத்தரவாதங்களை வழங்க ரஷ்ய அதிபர் ஒப்புக் கொண்டார்'', என டிரம்ப்பின் சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காப் கூறியுள்ளார்.


அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் சர்வதேச நாடுகள் உற்றுநோக்கிய, 'அமைதியை நோக்கி' என்ற பெயரிலான அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் - ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இடையிலான நேரடி சந்திப்பு, ஆக்கப்பூர்வமாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், உக்ரைனுடனான போர் நிறுத்தம் தொடர்பாக எந்த முடிவும் ஏற்படவில்லை. நாளை டிரம்ப்பை, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சந்திக்க உள்ளார்.


இந்நிலையில், டிரம்ப் வெளியிட்ட அறிக்கையில், ரஷ்யா மீதான விவகாரத்தில் பெரிய வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. காத்திருங்கள் எனக்கூறியுள்ளார்.


இதனிடையே, டிரம்ப்பின் சிறப்பு தூதரான ஸ்டீவ் விட்காப் கூறுகையில், அலாஸ்காவில் நடந்த சந்திப்பின் போது, உக்ரைனுக்கு பாதுகாப்பு உத்தரவாதங்களை வழங்க அமெரிக்க அதிபர் டிரம்ப்பும், ரஷ்யா அதிபர் புடினும் ஒப்புக் கொண்டுள்ளனர். இது முக்கியமான மாற்றத்தை ஏற்படுத்தும் நடவடிக்கையாகும் எனத் தெரிவித்துள்ளார்.

Advertisement