5 பேருக்கு மறுவாழ்வு கொடுத்த மணிகண்டன்; அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு

மதுரை: மதுரையில் விபத்தில் சிக்கி மூளைச்சாவடைந்த 22 வயது இளைஞரின் உடல் உறுப்புகள் தானத்தால், உயிருக்கு ஆபத்தான நிலையிலிருந்த 5 நோயாளிகளுக்கு மறுவாழ்வு வழங்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம், அவனியாபுரத்தைச் சேர்ந்த 22 வயதான மணிகண்டன், கடந்த ஆக., 14ம் தேதி சாலை விபத்தில் காயமடைந்த அவர், உடனடியாக சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். மேல் சிகிச்சைக்காக மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிறப்பு சிகிச்சைக்கு கொடுக்கப்பட்ட பிறகும் அவரது உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இளைஞர் மணிகண்டன் மூளைச்சாவு அடைந்துவிட்டதாக மருத்தவர்கள் அறிவித்தனர்.
அதைத் தொடர்ந்து, மருத்துவக் குழுவினர் மணிகண்டனின் குடும்பத்தினரிடம் அவரது உடல் உறுப்புகளைத் தானம் செய்யுமாறு கோரிக்கை விடுத்தனர். அதற்கு அவர்களும் ஒப்புக் கொண்டனர். அதன்படி, மணிகண்டனின் கல்லீரல் மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் இருந்த ஒரு நோயாளிக்குப் பொருத்தப்பட்டது. ஒரு சிறுநீரகம் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்திற்கும், மற்றொரு சிறுநீரகம் திருச்சிராப்பள்ளி கன்டோன்மென்ட்டில் உள்ள காவேரி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கும், மற்றும் அவரது இரண்டு கருவிழிகள் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டன.
மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் மருத்துவக் குழுவினர், மணிகண்டனின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தி, குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். அதன்பிறகு, அவரது இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெற்றது.


மேலும்
-
அவசர கட்டுப்பாட்டு மையத்தை நவீனமாக்குது நெடுஞ்சாலை ஆணையம்
-
தெருநாய்களை விரட்டி அடித்த 'சொட்டு நீலம்' கலந்த தண்ணீர்
-
சூதாட்டம் 14 பேர் கைது
-
கொடுத்த அவகாசம் முடிந்தும் 27 பணிகள் நிலுவை; 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் நகராட்சிகள் மெத்தனம்
-
ஆசிரியையிடம் செயின் பறித்த திருச்சி பலே திருடன் கைது
-
பா.ம.க., பொதுக்குழு தீர்மானங்கள்