வனப்பகுதியில் சுற்றுலாப்பயணிகள் தவிப்பு: தப்பி ஓடிய வழிகாட்டி

1

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் வனப்பகுதியில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச்சென்ற கேன்டர் கார் பழுதடைந்த நிலையில், அவர்களுடன் வந்த வழிகாட்டி, நடுவழியில் தவிக்கவிட்டு, பாதியிலேயே ஓடிவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ராஜஸ்தானின் ரந்தம்போர் தேசிய பூங்காவிற்கு, பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட சுற்றுலாப் பயணிகள் குழு ஒன்று பூங்காவின் மண்டலம் 6 இல் புலிகள் நிறைந்த காட்டில் சென்று கொண்டிருந்தது. அவர்கள் சென்ற சபாரி கேன்டர் திடீரென பழுதடைந்தது. இந்நிலையில் அவர்களுடன் வந்த வழிகாட்டி, மாற்று வாகனம் ஏற்பாடு செய்து தருவதாக கூறி தப்பிவிட்டார்.

இதனையடுத்து, அவர்கள் அந்த இடத்தில் 90 நிமிடங்கள் சிக்கிக் கொண்டனர். இந்த சம்பவம் குறித்து சுற்றுலாப்பயணிகள் வீடியோவில் எடுத்திருந்த நிலையில் அதை சமூக ஊடங்கங்களில் பரவ விட்டனர்.

சுற்றுலாப்பயணிகள் பதிவிட்ட வீடியோவில்,
இந்த சம்பவம் மாலை 6 மணி முதல் இரவு 7.30 மணிக்குள் நடந்திருப்பதாக காட்டியது. மேலும் 60க்கும் மேற்பட்ட புலிகள் வீட்டில் இருப்பதாகக் கூறப்படும் வனப்பகுதியின் நடுவில் குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட சுற்றுலா பயணிகள், தங்கள் மொபைல் வெளிச்சத்துடன் இருட்டில் அமர்ந்து பயத்தில் அழுவதைக் காட்டியது. அதன் அடிப்படையில், வனத்துறைகள் அதிகாரிகள், வனப்பகுதிக்கு சென்று அவர்களை மீட்டனர்.

இது குறித்து ரந்தம்போர் புலிகள் காப்பகத்தின் கள இயக்குநரும் தலைமை வனப் பாதுகாவலருமான அனூப் கூறியதாவது:

பூங்காவில் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பே முதன்மையானது. விதிகளை மீறும் எந்தவொரு வழிகாட்டி அல்லது டிரைவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்,எதிர்காலத்தில் இதுபோன்ற அலட்சியம் பொறுத்துக்கொள்ளப்படாது.

இவ்வாறு அனுாப் கூறினார்.

Advertisement