வாக்காளர் பட்டியல் மோசடி: தேர்தல் ஆணையம் பதில் சொல்லும் என்கிறார் மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி

திருச்சூர்: வாக்காளர் பட்டியலில் மோசடி குற்றச்சாட்டுகளை, நிராகரித்த மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துணை இணையமைச்சர் சுரேஷ் கோபி, அதற்கு தேர்தல் ஆணையமே பதிலளிக்கும் என்று கூறினார்.
2024 ஆம் பொதுத்தேர்தலில் திருச்சூர் லோக்சபா தொகுதிக்கான வாக்காளர் பட்டியலில் சேர்க்க தவறான அறிவிப்பைச் சமர்ப்பித்ததாக குற்றம் சாட்டி, கடந்த வாரம் காங்கிரஸ் கோபி மீது புதிய குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறிய அவருக்கு எதிராக காங்கிரஸ் போலீசில் புகார் அளித்தது.
இதனை தொடர்ந்து சுரேஷ் கோபி, அந்த குற்றச்சாட்டுகளை நிராகரித்து, முதல் முறையாக இன்று பதில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சுரேஷ் கோபி கூறியதாவது:
காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டுகள் எழுப்பிய வாக்காளர் பட்டியல் மோசடி குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை. தலைமை தேர்தல் ஆணையம் அவர்களுக்கு பதில் அளிக்கும்.
நான் ஒரு அமைச்சர், எனது பொறுப்புகளை சிறப்பாக நிறைவேற்றி வருகிறேன். வாக்காளர் பட்டியல் மோசடி குற்றச்சாட்டுகளை எனக்கு எதிராக திருப்பிய நபர்கள் வானரங்கள். இல்லையென்றால், இந்த விஷயத்தை சுப்ரீம் கோர்ட்டிற்கு எடுத்துச்செல்லும்போது அவர்களுக்கு பதில் கிடைக்கும். குற்றச்சாட்டுகளை எழுப்பிய வானரர்கள் பதில்களை பெற அங்கு செல்லலாம்.
இவ்வாறு சுரேஷ் கோபி கூறினார்.
மேலும்
-
அவசர கட்டுப்பாட்டு மையத்தை நவீனமாக்குது நெடுஞ்சாலை ஆணையம்
-
தெருநாய்களை விரட்டி அடித்த 'சொட்டு நீலம்' கலந்த தண்ணீர்
-
சூதாட்டம் 14 பேர் கைது
-
கொடுத்த அவகாசம் முடிந்தும் 27 பணிகள் நிலுவை; 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் நகராட்சிகள் மெத்தனம்
-
ஆசிரியையிடம் செயின் பறித்த திருச்சி பலே திருடன் கைது
-
பா.ம.க., பொதுக்குழு தீர்மானங்கள்