நியூயார்க் உணவகத்தில் துப்பாக்கிச்சூடு; 3 பேர் பலி, 8 பேர் காயம்

2


நியூயார்க்: நியூயார்க்கில் உணவகம் ஒன்றில் மர்ம நபர் இன்று காலை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும், 8 பேர் பலத்த காயமடைந்தனர்.


இது தொடர்பாக நியூயார்க் சிட்டி போலீசார் கூறியதாவது; ப்ரூக்லைன் பகுதியில் உள்ள உணவகத்தின் உள்ளே இன்று (ஆக.,17) அதிகாலை 3.30 மணியளவில் துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. அதில், 27 மற்றும் 35 வயதுடைய நபர்கள் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த 3வது நபரின் வயது குறித்த தகவல் தெரியவில்லை. இதுவரையில் குற்றவாளி யார் என்று அடையாளம் காணப்படாததால், கைது நடவடிக்கை ஏதும் மேற்கொள்ளவில்லை.


சம்பவ இடத்தில் 36 தோட்டாக்களின் உறைகள் கண்டெடுக்கப்பட்டன. 8 பேர் பலத்த காயமடைந்தனர். என்ன நடந்தது, துப்பாக்கிச்சூட்டுக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது, எனக் கூறினர்.

Advertisement