அலாஸ்கா ஹோட்டலில் கசிந்ததா டிரம்ப்-புடின் சந்திப்பு ரகசிய ஆவணங்கள்; 8 பக்கங்களில் முக்கிய தகவல்கள்

அலாஸ்கா; டிரம்ப், புடின் பேச்சுவார்த்தைக்கு சிலமணி நேரங்கள் முன்பாக, அலாஸ்காவில் ஹோட்டல் ஒன்றில் வெளியுறவுத்துறை ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ரஷ்யா, உக்ரைன் போருக்கு தீர்வு காணும் பொருட்டு, அலாஸ்காவில் அமெரிக்க அதிபர் டிரம்பும், ரஷ்ய அதிபர் புடினும் சந்தித்து பேசினர். பல மணி நேரம் நீடித்த இந்த பேச்சுவார்த்தையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. போர் நிறுத்தம் பற்றி எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை.
நாளை (ஆக.18) டிரம்பும், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் இதே விவகாரத்தை முன்வைத்து பேச இருக்கின்றனர். இதன் முடிவில் இருதரப்பிலும் இருந்து முக்கிய முடிவுகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந் நிலையில், அலாஸ்காவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் முக்கிய அரசாங்க தகவல்கள் அடங்கிய அமெரிக்க வெளியுறவுத்துறை ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள விவரம் வெளியாகி இருக்கிறது.
அலாஸ்காவில் டிரம்ப், புடின் இருவரும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய இடத்தில் இருந்து 20 கிமீ தொலைவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இருந்த பிரிண்டரில் இந்த ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கின்றன. இந்த ஆவணங்களை அங்கு தங்கியிருந்த 3 பேர் கண்டுபிடித்துள்ளனர். டிரம்ப், புடின் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கும் 3 மணிநேரத்திற்கு முன்பாக இந்த ஆவணங்களை அவர்கள் கண்டெடுத்து இருக்கின்றனர்.
மொத்தம் 8 பக்கங்கள் கொண்ட அந்த ஆவணங்களில் பல்வேறு அரசுத்துறை ஊழியர்கள் பற்றிய விவரங்கள், மொபைல் போன் எண்கள் உள்ளிட்ட விவரங்கள் இருந்துள்ளன. மேலும் புடினின் நிகழ்ச்சி நிரல், உணவருந்தும் போது யார்,யார் எல்லாம் உடனிருப்பார்கள் உள்ளிட்ட பல்வேறு அதி முக்கியமான தகவல்கள் அதில் இருந்து இருக்கின்றன.
முதல் 5 பக்கங்களில் பேச்சுவார்த்தை நாளின் அன்றைய விவரங்கள், கலந்து கொள்பவர்கள் பெயர்கள், நேரம், இடம், புடினுக்கு டிரம்ப் அளிக்க இருந்த நினைவு பரிசு உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்று இருக்கின்றன. 6வது பக்கத்தில் உணவு அருந்தும் இடம் மற்றும் உணவு மேசையில் யார், யார் எங்கே உட்காருவார்கள் என பெயர்களுடன் எழுதப்பட்டு உள்ள விவரங்கள் இடம்பெற்றுள்ளன.
குறிப்பாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் எந்த இடத்தில் உட்கார்ந்து உணவருந்துவார், அவரின் வலது மற்றும் இடதுபுறம் யார் உணவருந்துவார்கள் என்ற விவரமும் அந்த ஆவணங்களில் தெளிவாக இருக்கின்றன.
7வது பக்கத்தில் மதிய உணவுக்கான மெனு என்ன? என்ன சிறப்பு வகை உணவுகள் அளிக்கப்படுகின்றன என்ற விவரங்களும் குறிக்கப்பட்டு இருக்கின்றன.
இந்த ஆவணங்களை யார் அங்கே விட்டுவிட்டுச் சென்றது என்பது பற்றிய விவரங்கள் தெரியவில்லை. மொத்தம் 550 அறைகள் அந்த ஹோட்டலில் இருக்கும் நிலையில், எந்த பிரிண்டரில் இருந்து அவை எடுக்கப்பட்டன என்பதை ஹோட்டல் நிர்வாகம் தெரிவிக்க மறுத்துவிட்டது.
புடினின் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மத்தியில் இருந்தோ அல்லது அவர்களின் கவனக்குறைவு எதிரொலியாகவோ இந்த அதிமுக்கிய ஆவணங்கள் ஹோட்டலில் விடப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்த ஆவணங்கள் கண்டெடுக்கப்பட்டு இருப்பது பாதுகாப்பு குறைபாட்டின் எதிரொலி அல்ல என்று வெள்ளை மாளிகை துணை செய்தி தொடர்பாளர் அன்னா கெல்லி என்று மறுத்துள்ளார்.
மேலும்
-
துணை ஜனாதிபதி வேட்பாளர் தேர்வு பட்டியலில் 8 பேர்; முக்கிய அறிவிப்பை வெளியிடும் பாஜ
-
அமலாக்கத்துறைக்கு பதில் தேர்தல் ஆணையம்; மத்திய அரசு மீது தேஜஸ்வி யாதவ் விமர்சனம்
-
உக்ரைனின் 300 டிரோன்களை சுட்டு வீழ்த்தியது ரஷ்யா; ஏவுகணை கிடங்கும் தாக்கி அழிப்பு
-
ஜெலன்ஸ்கியுடன் டிரம்ப்பை சந்திக்கும் ஐரோப்பிய தலைவர்கள்
-
குஜராத்தில் விபத்து; கார் மோதியதில் ஒரே குடும்பத்தில் 7 பேர் பலி
-
ஒடிசா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக் மருத்துவமனையில் அனுமதி!