டில்லியில் சட்ட விரோதமாக வசித்த நைஜீரியர்கள் 3 பேர் கைது!

புதுடில்லி: டில்லியில் சட்ட விரோதமாக தங்கியிருந்த நைஜீரிய நாட்டவர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.


நம் அண்டை நாடான வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள், டில்லியில் சட்ட விரோதமாக குடியேறி வசித்து வருவோரை நாடு கடத்தும் பணி நடந்து வருகிறது. வங்க தேசத்தினரை தொடர்ந்து நைஜீரியர்கள் சட்ட விரோதமாக வசித்து வருவதாக டில்லி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்படி துவாரகாவில், போலீசார் நடத்திய சோதனையில் சட்ட விரோதமாக வசித்து வந்த நைஜீரியர்கள் 3 பேர் அடையாளம் காணப்பட்டனர். அவர்களை போலீசார் கைது செய்து, நாடு கடத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


மூன்று நபர்களும் என்கோசினா மைக்கேல் நவாசா, சினெடு விக்டர் சுகுடி மற்றும் பெமி ஜிமோ அடேபாஜோ என அடையாளம் காணப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். விசா காலம் நிறைவடைந்தும் சட்டவிரோதமாக வசித்து வந்தது விசாரணையில் அம்பலமானது.

இது குறித்து போலீசார் கூறியதாவது: டில்லியில் சட்ட விரோதமாக வசித்து வருபவர்களை கைது செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகிறது. விரைவில் சட்ட விரோதமாக வசித்து வரும் அனைவரும் நாடு கடத்தப்படுவார்கள் என தெரிவித்தனர்.

Advertisement