துாரந்த் கோப்பை: ஜாம்ஷெட்பூர் தோல்வி

ஜாம்ஷெட்பூர்: துாரந்த் கோப்பை கால்பந்து காலிறுதியில் ஜாம்ஷெட்பூர் அணி தோல்வியடைந்தது. டயமண்ட் ஹார்பர் அணி அரையிறுதிக்கு முன்னேறியது.
இந்தியாவில், துாரந்த் கோப்பை கால்பந்து 134வது சீசன் நடக்கிறது. முதலிரண்டு காலிறுதியில் அசத்திய ஷில்லாங் லஜோங், வடகிழக்கு யுனைடெட் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.

ஜாம்ஷெட்பூரில் (ஜார்க்கண்ட்) நடந்த 3வது காலிறுதியில் ஜாம்ஷெட்பூர், டயமண்ட் ஹார்பர் அணிகள் மோதின.

@block_B@block_B

துவக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்திய டயமண்ட் ஹார்பர் அணிக்கு சாய்ருவாட் கிமா 2 கோல் (3, 41வது நிமிடம்) அடித்து கைகொடுத்தார். கடைசி நிமிடம் வரை போராடிய ஜாம்ஷெட்பூர் அணியினரால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை.
ஆட்டநேர முடிவில் டயமண்ட் ஹார்பர் அணி 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது.


ஈஸ்ட் பெங்கால் அபாரம்

கோல்கட்டாவில் நடந்த மற்றொரு காலிறுதியில் ஈஸ்ட் பெங்கால், மோகன் பகான் அணிகள் மோதின. இதில் ஈஸ்ட் பெங்கால் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது. ஈஸ்ட் பெங்கால் சார்பில் டிமிட்ரியோஸ் டயமண்டகோஸ் 2 கோல் (38, 52வது நிமிடம்) அடித்தார். மோகன் பகான் அணிக்கு அனிருத் தபா (68வது நிமிடம்) ஆறுதல் தந்தார்.

அரையிறுதியில் (ஆக. 20) ஈஸ்ட் பெங்கால், டயமண்ட் ஹார்பர் அணிகள் மோதுகின்றன.

Advertisement