கட்டடம் இடிந்து தொழிலாளர் 3 பேர் பலி: டில்லியில் சோகம்

புதுடில்லி: டில்லியில் கட்டுமானத்தில் இருந்த கட்டடம் இடிந்து விழுந்ததில், தொழிலாளர்கள் 3 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய டில்லியின் தர்யாகன்ஜில் உள்ள சத்பவனா பூங்கா அருகே, 3 அடுக்குமாடி கட்டடத்தின் கட்டுமானப்பணி நடைபெற்றுக்கொண்டிருந்தது. அப்போது கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.
பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் 3 பேர் சிக்கி உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் மீட்பு பணி மேற்கொண்டனர்.

Advertisement