எண்கள் சொல்லும் செய்தி

1,20,000

கடந்த 2024--25ம் நிதியாண்டில், நாட்டின் ஸ்மார்ட்போன் அல்லாத மின்னணு பொருட்கள் ஏற்றுமதி, 1.20 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு நடைபெற்று இருப்பதாக மின்னணு மற்றும் மென்பொருள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் தெரிவித்துள்ளது.

மேலும், இதே காலத்தில், நாட்டின் ஒட்டுமொத்த மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதி, முந்தைய ஆண்டோடு ஒப்பிடுகையில், 32 சதவீதம் அதிகரித்து, கிட்டத்தட்ட 3.28 லட்சம் கோடி ரூபாயாக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3,639

கடந்த ஜூலையில், உலகளவில் தங்க இ.டி.எப்., திட்டங்களின் வசமுள்ள தங்கத்தின் கையிருப்பு 3,639 டன்னாக அதிகரித்து இருப்பதாக உலக தங்க கவுன்சில் அறிக்கை தெரிவிக்கிறது.

கடந்த 2022, ஆகஸ்ட் மாதத்துக்கு பின், இ.டி.எப்., திட்டங்களில் பதிவான அதிகபட்ச கையிருப்பு இது.

தொடர்ச்சியாக தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பு, விலை உயர்வு ஆகியவை காரணமாக, இ.டி.எப்., திட்டங்களின் மொத்த மதிப்பு 33 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்து உள்ளது.

Advertisement