பங்கு சந்தை நிலவரம்: கைகொடுத்த ஐ.டி., துறை

கைகொடுத்த ஐ.டி., துறை
வாரத்தின் மூன்றாவது வர்த்தக நாளான நேற்று, இந்திய பங்கு சந்தைகள் ஏற்றத்துடன் முடிவடைந்தன. அன்னிய முதலீடுகள் மீண்டும் வெளியேறத் துவங்கியதன் காரணமாக, நேற்று வர்த்தகம் ஆரம்பித்த போது, சந்தை குறியீடுகள் சரிவுடன் துவங்கின.
ஜி.எஸ்.டி., சீர்திருத்தம், நடப்பாண்டின் இரண்டாவது அரையாண்டில், முக்கிய துறைகளில் நுகர்வை அதிகரிக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியது, ஐ.டி., துறை பங்குகள் அதிகம் வாங்கப்பட்டது ஆகிய காரணங்களால், சற்று நேரத்திலேயே, சந்தை குறியீடுகள் உயர்வு பாதைக்கு திரும்பின.
நேற்றைய வர்த்தக நேரத்தின் போது, சென்செக்ஸ் 341 புள்ளிகள் வரை உயர்வு கண்ட
நிலையில், முடிவில் சற்று குறைந்து, சென்செக்ஸ் 213 புள்ளிகளுடன் நிறைவு செய்தது. தொடர்ச்சியாக, ஐந்தாவது நாளாக நிப்டி, சென்செக்ஸ் உயர்வுடன் நிறைவு செய்தன.
உலக சந்தைகள்
செவ்வாயன்று அமெரிக்க சந்தைகள் இறக்கத்துடன் முடிவடைந்தன. ஆசிய சந்தைகளில்,
ஜப்பானின் நிக்கி, தென் கொரியாவின் கோஸ்பி குறியீடுகள்சரிவுடனும்; ஹாங்காங்கின் ஹேங்சேங், சீனாவின் ஷாங்காய் எஸ்.எஸ்.இ., குறியீடுகள் உயர்வுடனும் முடிவடைந்தன. ஐரோப்பிய சந்தைகள் கலவையாக வர்த்தகமாகின.
உயர்வுக்கு காரணங்கள்
1 ஜி.எஸ்.டி., சீர்திருத்தம் நுகர்வை அதிகரிக்கும் என்ற நம்பிக்கை 2ஐ.டி., துறை பங்குகளை
முதலீட்டாளர்கள் வாங்கிக் குவித்தது
அன்னிய முதலீடு
அன்னிய முதலீட்டாளர்கள் 1,100 கோடி ரூபாய்க்கு பங்குகளை விற்று இருந்தனர்.
கச்சா எண்ணெய்
உலகளவிலான கச்சா எண்ணெய் விலை நேற்று 1 பேரலுக்கு 1.14 சதவீதம் குறைந்து, 66.54 அமெரிக்க டாலராக இருந்தது.
ரூபாய் மதிப்பு
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 6 பைசா அதிகரித்து, 87.07 ரூபாயாக இருந்தது.
மேலும்
-
வீடு புகுந்து நாய் கடித்ததில் குழந்தை, பாட்டி படுகாயம்
-
'டி.ஜி.பி., பதவியில் சாதகமானவரை நியமிக்க தி.மு.க., அரசு முயற்சி': பழனிசாமி
-
மகளிர் உரிமை தொகை ரூ.1,500; தீபாவளிக்கு சேலை, பொங்கலுக்கு ரூ.2,500 வாக்குறுதிகளை அள்ளி வீசும் பழனிசாமி
-
தி.மு.க., பற்றி அடக்கிவாசிப்பு; முதல்வர் சந்திப்புக்கு பின் சீமான் பேச்சில் மாற்றம்
-
கூட்டணி தலைவர்களுக்கு முதல்வர் வீட்டில் விருந்து; தொகுதி குறைப்பு, புதிய கட்சிகள் வருகை குறித்து பேச்சு
-
ம.தி.மு.க.,வில் மல்லை சத்யா சஸ்பெண்ட்; செப்., 15ல் புதிய கட்சி துவங்க திட்டம்