இந்தியா கோல் மழை * தெற்காசிய கால்பந்தில்...

திம்பு: தெற்காசிய கால்பந்து லீக் போட்டியில் கோல் மழை பொழிந்த இந்திய இளம் பெண்கள் அணி, 7-0 என நேபாளத்தை வீழ்த்தியது.
பூடானில், 17 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் 7வது சீசன் நேற்று துவங்கியது. இந்தியா, வங்கதேசம், நேபாளம், பூடான் என 4 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா இரண்டு முறை மோதும். முடிவில் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பெறும் அணி, கோப்பை வெல்லும்.
நேற்று திம்புவில் நடந்த முதல் போட்டியில் இந்தியா, நேபாள அணிகள் மோதின. போட்டியின் 16 வது நிமிடத்தில் அப்ஹிஸ்தா இந்திய அணிக்கு முதல் கோல் அடித்தார். 25வது நிமிடத்தில் நிரா சானு, 33 வது நிமிடம் அனுஷ்கா தலா ஒரு கோல் அடித்தனர். 41 வது நிமிடம் மீண்டும் அசத்திய அப்ஹிஸ்தா, இரண்டாவது கோல் அடித்தார். முதல் பாதியின் ஸ்டாப்பேஜ் நேரத்தில் ஜுலன் (45+1 வது) ஒரு கோல் அடிக்க, இந்தியா 5-0 என முன்னிலை பெற்றது.
இரண்டாவது பாதியில் நிரா (56), அனுஷ்கா (62) தங்கள் பங்கிற்கு மீண்டும் தலா ஒரு கோல் அடித்தனர். முடிவில் இந்திய அணி 7-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. நாளை தனது இரண்டாவது போட்டியில் இந்திய அணி, வங்கதேசத்தை வீழ்த்தியது.
மேலும்
-
சி.பி.எஸ்.இ., தென் மண்டல கைப்பந்து கவிபாரதி வித்யாலயா பள்ளி வெள்ளி
-
தேசிய சீனியர் தடகளம்: 700 வீரர்கள் உற்சாகம்
-
'ஜி.எஸ்.டி., சீர்திருத்தங்களால் நுகர்வு ரூ.2 லட்சம் கோடி உயரும்' எஸ்.பி.ஐ., ஆய்வறிக்கையில் தகவல்
-
ஜி.எஸ்.டி., அமைச்சர்கள் குழுக்களுடன் நிதியமைச்சர் சந்திப்பு
-
மாநகராட்சி தீர்மானத்தை ரத்து செய்ய ஐகோர்ட்.. நிராகரிப்பு :. துாய்மை பணிகளை தனியாருக்கு வழங்க அனுமதி
-
விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் விதிமுறை, கட்டுப்பாடு அறிவிப்பு