'ஜி.எஸ்.டி., சீர்திருத்தங்களால் நுகர்வு ரூ.2 லட்சம் கோடி உயரும்' எஸ்.பி.ஐ., ஆய்வறிக்கையில் தகவல்

புதுடில்லி:விரைவில் மேற்கொள்ளப்படவுள்ள ஜி.எஸ்.டி., சீர்திருத்தங்களால், அரசுக்கு சராசரியாக, ஆண்டுக்கு 85,000 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும் என, எஸ்.பி.ஐ., ரிசர்ச் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், மக்களின் நுகர்வு 1.98 லட்சம் கோடி ரூபாய் அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டு உள்ளது. தற்போது ஐந்து அடுக்குகளாக உள்ள ஜி.எஸ்.டி., நடைமுறையை , தீபாவளிக்கு முன்னதாக இரண்டு அடுக்குகளாக குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்நிலையில், இதன் பொருளாதார தாக்கம் குறித்து எஸ்.பி.ஐ., ரிசர்ச் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த 2017 ஜூலையில் அறிமுகப்படுத்தப்பட்டபோது, சராசரி ஜி.எஸ்.டி., விகிதம் 14.40 சதவீதமாக இருந்தது.
பொருட்கள் மற்றும் சேவைகளின், விற்பனை மற்றும் நுகர்வு அடிப்படையில் இது கணக்கிடப்படுகிறது. கடந்த 2019 செப்டம்பரில் 11.60 சதவீதமாக குறைந்த நிலையில், அடுத்து வரும் மாற்றத்துக்கு பின் 9.50 சதவீதமாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் மத்திய - மாநில அரசுகளுக்கு, சராசரியாக ஆண்டுக்கு 85,000 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும். அக்டோபர் மாதம் முதல் புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டால், நடப்பு நிதியாண்டில் 45,000 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார வளர்ச்சி 0.60% அதிகரிக்க கூடும் சில்லரை பணவீக்கம் 0.25% குறைய வாய்ப்பு
@block_B@
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், டில்லியில் நேற்று ஜி.எஸ்.டி., அமைச்சர்கள் குழுக்களை சந்தித்து, அரசின் வரி சீர்திருத்த திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார். இதுதொடர்பாக ஜி.எஸ்.டி., சீரமைப்பு, காப்பீடு வரி விதிப்பு மற்றும் இழப்பீடு செஸ் தொடர்பான மூன்று அமைச்சர்கள் குழு நேற்றும், இன்றும் விவாதிக்கின்றன. இந்த குழுக்களை சந்தித்த நிதியமைச்சர், சீர்திருத்தங்களுக்கான தேவை குறித்து எடுத்துரைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.block_B
மேலும்
-
வீடு புகுந்து நாய் கடித்ததில் குழந்தை, பாட்டி படுகாயம்
-
'டி.ஜி.பி., பதவியில் சாதகமானவரை நியமிக்க தி.மு.க., அரசு முயற்சி': பழனிசாமி
-
மகளிர் உரிமை தொகை ரூ.1,500; தீபாவளிக்கு சேலை, பொங்கலுக்கு ரூ.2,500 வாக்குறுதிகளை அள்ளி வீசும் பழனிசாமி
-
தி.மு.க., பற்றி அடக்கிவாசிப்பு; முதல்வர் சந்திப்புக்கு பின் சீமான் பேச்சில் மாற்றம்
-
கூட்டணி தலைவர்களுக்கு முதல்வர் வீட்டில் விருந்து; தொகுதி குறைப்பு, புதிய கட்சிகள் வருகை குறித்து பேச்சு
-
ம.தி.மு.க.,வில் மல்லை சத்யா சஸ்பெண்ட்; செப்., 15ல் புதிய கட்சி துவங்க திட்டம்