தனலட்சுமி, தமிழரசு 'தங்கம்' * தேசிய தடகள சாம்பியன்ஷிப்பில்...

சென்னை: சென்னையில், மாநிலங்களுக்கு இடையிலான தேசிய தடகள சாம்பியன்ஷிப் 64 வது சீசன், நேற்று துவங்கியது. இதில் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் ஜப்பானின் டோக்கியோவில் நடக்க உள்ள உலக தடக சாம்பியன்ஷிப்பில் (செப். 13-21) பங்கேற்க தகுதி பெறலாம்.
பெண்களுக்கான 100 மீ., ஓட்டத்தில் தமிழகத்தின் தனலட்சுமி, 11.36 வினாடி நேரத்தில் வந்து முதலிடம் பெற்று தங்கம் கைப்பற்றினார். மற்றொரு தமிழக வீராங்கனை அபிநயா (11.58) வெள்ளி, கர்நாடகாவின் ஸ்நேகா (11.61) வெண்கலம் வென்றனர்.
ஆண்களுக்கான 100 மீ., ஓட்டத்தில் தமிழகத்தின் தமிழரசு, 10.22 வினாடியில் கடந்து தங்கம் கைப்பற்றினார். கர்நாடகாவின் மணிகண்டன் (10.35), தமிழகத்தின் ராகுல் குமார் (10.40) வெள்ளி, வெண்கலம் கைப்பற்றினர்.
ஆண்களுக்கான போல் வால்ட் போட்டி நடந்தது. இதில் அசத்திய தமிழக வீரர்கள் ரீகன் (5.20 மீ.,), கவுதம் (5.20), கமல் லோகநாதன் (5.00) முதல் மூன்று இடம் பிடித்து பதக்கங்களை தட்டிச் சென்றனர்.
நேற்றைய முதல் நாளில் 7 பிரிவுகளில் பைனல் நடந்தது. இதில் தமிழகம் 3 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம் என 7 பதக்கங்களை கைப்பற்றியது.

Advertisement