சைபர் குற்ற மோசடி : பீஹாரில் 6 பேர் கைது

பாட்னா: மாநிலங்களுக்கு இடையேயான சைபர் குற்ற மோசடியை, பீஹார் போலீசார் முறியடித்து, குற்றம் தொடர்பாக 6 பேர் கைது செய்தனர்.
மாநிலங்களுக்கிடையே பல்வேறு சைபர் குற்றங்களை செய்து ஏமாற்றி வரும் மோசடி கும்பல்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக புகார் எழுந்த நிலையில், சைபர் குற்றத்தடுப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து தீவிர சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதன் அடிப்படையில் நடத்தப்பட்ட சோதனையில் சந்தேக நபர்களை பிடித்து விசாரித்ததில் சைபர் குற்றம் மோசடிகளை அரங்கேற்றிய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
இது குறித்து எஸ்பி ஸ்வர்ன் பிரபாத் கூறியதாவது:
கைது செய்யப்பட்டவர்கள், போலி கடன் சலுகைகள், மோசடி மின்சார பில் புதுப்பிப்புகள், வேலை வாய்ப்புகள் மற்றும் டிஜிட்டல் கைது உள்ளிட்ட பல்வேறு சைபர் குற்றங்கள் மூலம் பலரை ஏமாற்றியது தெரியவந்துள்ளது.
மேலும் இந்த கும்பல் வெவ்வேறு வங்கிக் கணக்குகள் மூலம் அதிக மதிப்புள்ள பரிவர்த்தனைகளை உள்ளடக்கிய ஆன்லைன் மோசடியில் ஈடுபட்டது. அவர்களின் கணக்குகளில் இருந்து ரூ.1 கோடி பறிமுதல் செய்துள்ளோம். கைதான கும்பலுடன் தொடர்புள்ள மற்றவர்களை பிடிப்பதற்கான விசாரணை தொடர்ந்து நடைபெறுகிறது.
இவ்வாறு ஸ்வர்ன் பிரபாத் கூறினார்.
மேலும்
-
சி.பி.எஸ்.இ., தென் மண்டல கைப்பந்து கவிபாரதி வித்யாலயா பள்ளி வெள்ளி
-
தேசிய சீனியர் தடகளம்: 700 வீரர்கள் உற்சாகம்
-
'ஜி.எஸ்.டி., சீர்திருத்தங்களால் நுகர்வு ரூ.2 லட்சம் கோடி உயரும்' எஸ்.பி.ஐ., ஆய்வறிக்கையில் தகவல்
-
ஜி.எஸ்.டி., அமைச்சர்கள் குழுக்களுடன் நிதியமைச்சர் சந்திப்பு
-
மாநகராட்சி தீர்மானத்தை ரத்து செய்ய ஐகோர்ட்.. நிராகரிப்பு :. துாய்மை பணிகளை தனியாருக்கு வழங்க அனுமதி
-
விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் விதிமுறை, கட்டுப்பாடு அறிவிப்பு