எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை சிறுமிக்கு எம்.ஜி.எம்., மறுவாழ்வு
சென்னை, அரிதான மரபணு கோளாறால் பாதிக்கப்பட்ட சிறு மிக்கு, பாதியளவு பொருந்தக் கூடிய எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை அளித்து, எம்.ஜி.எம்., புற்றுநோய் மருத்துவமனை டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர்.
இதுகுறித்து, எம்.ஜி.எம்., புற்றுநோய் மருத்துவமனையின் குழந்தைகளுக்கான ரத்தவியல், புற்றுநோயியல் துறை தலைவர் எம்.தீன தயாளன் கூறியதாவது:
சென்னையை சேர்ந்த, 12 வயது சிறுமிக்கு, 'ப்ளூம் சிண்ட்ரோம்' என்ற அரிதான மரபணு கோளாறு கண்டறியப்பட்டது. குரோமோசோம் குறைவால் இவ்வகை பாதிப்பு ஏற்படுகிறது.
இவை, ஆரோக்கியமான ரத்த அணுக்கள், எலும்பு மஜ்ஜை உற்பத்தி செய்ய தவறுகிறது. மேலும், ரத்த புற்றுநோயை உண்டாக்கும் அபாயம் இருந்ததால், எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை மட்டுமே தீர்வாக இருந்தது.
பாதியளவு பொருந்தக் கூடிய சிறுமியின் தம்பியிடம் இருந்து, எலும்பு மஜ்ஜை தானம் பெறப்பட்டு, சிறுமிக்கு பொருந்த கூடிய வகையில், 'டி.சி.ஆர்., ஆல்பா பீட்டா செல்கள்' நீக்கப்பட்டு, சிறுமிக்கு எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை செய்யப்பட்டது.
தற்போது சிறுமிக்கு நோய் எதிர்ப்பு சக்தி, 100 சதவீதம் உறுதி செய்யப் பட்டு, நலமுடன் உள்ளார். இதுபோன்ற பாதியளவு பொருந்தக்கூடிய எலும்பு மஜ்ஜை சிகிச்சை உலகளவில் முதன்முறையாக செய்து, சாதனை படைத்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
ஹிந்துக்களின் உணர்வுபூர்வ விஷயத்தில் துஷ்ட சக்திகள் விளையாட்டு; தர்மஸ்தலா விவகாரத்தில் கண்ணுக்கு தெரியாத கைகள்
-
வீடு புகுந்து நாய் கடித்ததில் குழந்தை, பாட்டி படுகாயம்
-
'டி.ஜி.பி., பதவியில் சாதகமானவரை நியமிக்க தி.மு.க., அரசு முயற்சி': பழனிசாமி
-
மகளிர் உரிமை தொகை ரூ.1,500; தீபாவளிக்கு சேலை, பொங்கலுக்கு ரூ.2,500 வாக்குறுதிகளை அள்ளி வீசும் பழனிசாமி
-
தி.மு.க., பற்றி அடக்கிவாசிப்பு; முதல்வர் சந்திப்புக்கு பின் சீமான் பேச்சில் மாற்றம்
-
கூட்டணி தலைவர்களுக்கு முதல்வர் வீட்டில் விருந்து; தொகுதி குறைப்பு, புதிய கட்சிகள் வருகை குறித்து பேச்சு