துணை ஜனாதிபதி தேர்தல்: கூடுதல் செயலாளர்கள் இருவர் நியமனம்

புதுடில்லி:செப்டம்பர் 9 ஆம் தேதி நடைபெற உள்ள துணை ஜனாதிபதி தேர்தலில் பார்வையாளர்களாக , கூடுதல் செயலாளர்கள் இருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் ஆணையம் இன்று தெரிவித்துள்ளது.
துணை ஜனாதிபதி தேர்தல் வரும் செப்டம்பர் மாதம் நடைபெறுகிறது. துணை ஜனாதிபதி தேர்தலில் பாஜ கூட்டணி சார்பில் சி.பி ராதாகிருஷ்ணன், இண்டி கூட்டணி சார்பில் சுதர்சன் ரெட்டி ஆகிய இருவரும் போட்டியிடுகின்றனர். சி.பி ராதாகிருஷ்ணன் நேற்று (ஆகஸ்ட் 20) வேட்பு மனு தாக்கல் செய்தார். இன்று சுதர்சன் ரெட்டி வேட்பு மனு தாக்கல் செய்தார்.
இந்நிலையில் துணை ஜானாதிபதி தேர்தலை நடத்துவதற்கு பார்வையாளர்களாக கூடுதல் செயலாளர்கள் இருவர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளதாவது:
செப்டம்பர் 9 ஆம் தேதி நடைபெறும் துணை ஜனாதிபதி தேர்தலுக்கான பார்வையாளர்களாக மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் சுஷில் குமார் லோஹானி மற்றும் நிதி அமைச்சகத்தின் செலவினத் துறை கூடுதல் செயலாளர் டி. ஆனந்தன், ஆகியோர் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
நில வளத் துறையின் கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் இணைச் செயலாளர் நிதின் குமார் ஷிவ்தாஸ் காடே, காத்திருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு தலைமை தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.