உக்ரைன், மேற்காசியாவில் அமைதி; பிரான்ஸ் அதிபருடன் பிரதமர் மோடி ஆலோசனை

புதுடில்லி: உக்ரைன் மற்றும் மேற்கு ஆசியாவில் அமைதியை கொண்டு வர பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி உள்ளார்.
உக்ரைனில் மோதல்கள் மற்றும் மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் பதட்டங்கள் சர்வதேச ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலாக இருக்கும் நிலையில், பிரதமர் மோடி பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுடன் தொலைபேசியில் பேசியுள்ளார்.
இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
* எனது நண்பர் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானுடன்
மிகச் சிறந்த உரையாடலை நடத்தினேன்.
* உக்ரைன் மற்றும் மேற்கு ஆசியாவில் மோதல்களை அமைதியான முறையில் தீர்ப்பதற்கான முயற்சிகள் குறித்து ஆலோசித்தோம்.
* இந்தியா-பிரான்ஸ் இடையேயான உறவை மேலும் வலுப்படுத்துவதற்கான எங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினோம். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.
