தமிழக அணி சாம்பியன்: தேசிய தடகளத்தில் அசத்தல்

சென்னை: தேசிய தடகளத்தில் தமிழக அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
சென்னையில், மாநிலங்களுக்கு இடையிலான தேசிய தடகள சாம்பியன்ஷிப் 64வது சீசன் நடந்தது. ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் உ.பி.,யின் ரோகித் யாதவ், அதிகபட்சமாக 83.65 மீ., எறிந்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். உ.பி.,யின் சச்சின் யாதவ் (83.20 மீ.,), மகாராஷ்டிராவின் ஷிவம் (80.20 மீ.,) வெள்ளி, வெண்கலம் வென்றனர்.
ஆண்களுக்கான நீளம் தாண்டுதலில் கேரளாவின் முரளி ஸ்ரீசங்கர், அதிகபட்சமாக 8.06 மீ., தாண்டி தங்கம் வென்றார். கர்நாடகாவின் லோகேஷ் (7.71 மீ.,), தமிழகத்தின் சுவாமிநாதன் (7.70 மீ.,) வெள்ளி, வெண்கலம் கைப்பற்றினர்.
பெண்களுக்கான உயரம் தாண்டுதலில் தமிழகத்தின் கோபிகா (1.80 மீ.,) முதலிடம் பிடித்து தங்கத்தை தட்டிச் சென்றார். பெண்களுக்கான 3000 மீ., 'ஸ்டீபிள்சேஸ்' ஓட்டத்தில் தமிழகத்தின் அனுபிரியா (10 நிமிடம், 36.81 வினாடி) வெண்கலம் வென்றார். பெண்களுக்கான 10,000 மீ., ஓட்டத்தில் தமிழகத்தின் லதா (36 நிமிடம், 19.07 வினாடி) வெண்கலம் கைப்பற்றினார்.
ஆண்களுக்கான 4x400 மீ., தொடர் ஓட்டத்தில் சந்தோஷ், யோகேஷ், ராஜேஷ் ரமேஷ், விஷால் அடங்கிய தமிழக அணி, பந்தய துாரத்தை 3 நிமிடம், 07.53 வினாடியில் கடந்து தங்கத்தை தட்டிச் சென்றது.
பெண்களுக்கான 4x400 மீ., தொடர் ஓட்டத்தில் ஒலிம்பா ஸ்டெபி, தேசிகா, மரியா, வித்யா ராம்ராஜ் அடங்கிய தமிழக அணி (3 நிமிடம், 38.54 வினாடி) வெண்கலம் வென்றது.
பெண்களுக்கான 'ஹெப்டத்லான்' போட்டியில் தமிழகத்தின் தீபிகா (5134 புள்ளி) வெள்ளி வென்றார். கேரளாவின் அனாமிகா (5466) தங்கத்தை தட்டிச் சென்றார்.
தமிழகம் சாம்பியன்
இத்தொடரில் ஆதிக்கம் செலுத்திய தமிழக அணி, 195 புள்ளிகளுடன் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றது. ஹரியானாவுக்கு (121 புள்ளி) 2வது இடம் கிடைத்தது. சிறந்த வீரராக தமிழகத்தின் விஷால் (400 மீ., ஓட்டம்), சிறந்த வீராங்கனையாக உத்தரகாண்ட்டின் அங்கிதா (3000 மீ., 'ஸ்டீபிள்சேஸ்') தேர்வாகினர்.
மேலும்
-
செங்கல்பட்டில் இசை தியான நிகழ்ச்சி
-
ஒன்றரை ஆண்டிலேயே பல்லாங்குழியான பாரிவாக்கம் - மேட்டுப்பாளையம் சாலை
-
திருப்போரூர் -- காட்டூர் சாலையில் மின்விளக்கு இல்லாமல் தவிப்பு
-
குறைகளை தெரிவிக்க க்யூ.ஆர்., குறியீடு அறிமுகம் செய்தார் திருவள்ளூர் எம்.பி.,
-
தொடர் மழையால் வைக்கோல் கட்டுகள் நாசம்
-
15 ஆண்டாக சீரமைக்காத சாலை கடம்பத்துார் மக்கள் போராட்டம்