தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட மூன்று வாலிபர்களுக்கு 'கம்பி'

மடிப்பாக்கம், மடிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்டீபன்ராஜ், 40. பழைய இரும்பு கடை நடத்தி வருகிறார். இவர், கடந்த 24ம் தேதி இரவு, கடையை மூடும்போது, அங்கு அடையாளம் தெரியாத மூவர் வந்தனர்.
அவர்கள், ஸ்டீபன்ராஜிடம் வாக்குவாதம் செய்து, கத்தியைக் காட்டி மிரட்டி, அவர் வைத்திருந்த பணம் 3,500 ரூபாயை பறித்து, இரு சக்கர வாகனத்தில் தப்பினர். இதுகுறித்த புகாரின்படி, மடிப்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர்.
இந்நிலையில், சம்பவத்தில் ஈடுபட்ட, பொழிச்சலுாரைச் சேர்ந்த அஜித் என்கிற முனுசாமி, 26, செம்மஞ்சேரியைச் சேர்ந்த அசோக், 25, மடிப்பாக்கத்தைச் சேர்ந்த சத்யபிரியன், 21, ஆகியோரை, நேற்று முன்தினம் கைது செய்தனர்.
விசாரணையில், முனுசாமி மற்றும் அசோக் இருவரும் சேர்ந்து, கடந்த 19ல் மடிப்பாக்கம் பகுதியில், ஒரு பெண்ணிடம் மொபைல் போன் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டதும், 22ம் தேதி மடிப்பாக்கம், ராம்நகர் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை திருடியதும் தெரியவந்தது.
அவர்களிடமிருந்து, 1,200 ரூபாய், குற்றச்செயலுக்கு பயன்படுத்திய 3 இருசக்கர வாகனங்கள், 3 ஹெல்மெட்டுகள் மற்றும் மொபைல் போன் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணைக்கு பின், அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும்
-
பயங்கரவாதிகளின் கூடாரமாக மாறி வரும் பூம்பாறை
-
அவசர கால நிவாரணங்களை விரைந்து அறிவிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு சைமா வலியுறுத்தல்
-
செப்டம்பர், 2 வரை மழை பெய்யும்
-
விநாயகர் சிலைகள் குளங்களில் விசர்ஜனம்
-
அமெரிக்காவுக்கு பெரிய கும்பிடு போடுகிறார் மோடி! முக்கியமான 40 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய ஏற்பாடு
-
அகில இந்திய கூடைப்பந்து: இந்தியன் வங்கி அணி வெற்றி